மட்டர் பனீர் மசாலா (Mattar paneer masala recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#cookwithfriend சப்பாத்தியுடன் சேர்த்து மட்டர் பனீர் மசாலா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

மட்டர் பனீர் மசாலா (Mattar paneer masala recipe in tamil)

#cookwithfriend சப்பாத்தியுடன் சேர்த்து மட்டர் பனீர் மசாலா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 200 கிராம்பன்னீர்
  2. 100 கிராம்பட்டாணி
  3. 4தக்காளி
  4. 1பெரிய வெங்காயம்
  5. கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  6. சிறிய துண்டுஇஞ்சி
  7. ஆறு பல்பூண்டு
  8. 1 டேபிள் ஸ்பூன்ஃப்ரஷ் கிரீம்
  9. ஒரு குழிக்கரண்டிஎண்ணெய்
  10. உப்பு தேவையான அளவு
  11. மசாலா பொடி அரைக்க:
  12. 1.5டீஸ்பூன்சீரகம்
  13. 2 டீஸ்பூன்தனியா
  14. 4வர மிளகாய்
  15. ஒரு அங்குலத் துண்டுபட்டை
  16. 2கிராம்பு
  17. பிரியாணி இலை ஒன்று

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் வெறும் வாணலியில் தனியா சீரகம் பட்டை கிராம்பு வர மிளகாய் பிரியாணி இலை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு நறுக்கிய வெங்காயம் நறுக்கிய தக்காளி மற்றும் வதக்கிக் கொள்ளவும். வதக்கிய பொருட்களை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஊறவைத்த பட்டாணியையும் மூன்று விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்

  4. 4

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி கலவையை நன்கு வதக்கிக் கொள்ளவும். சுருண்டு வரும் வரை வதக்கி மசாலா பொடி சேர்க்கவும்.

  5. 5

    அதே வாணலியில் வேகவைத்த பட்டாணியை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்

  6. 6

    இப்பொழுது பட்டாணி கலவையுடன் நறுக்கி வைத்த பன்னீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு பிரஷ் கிரீம் ஒரு ஸ்பூனை அதனுடன் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகளை சேர்த்து அலங்கரிக்கவும்.

  7. 7

    சுவையான மட்டர் பனீர் மசாலா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes