கொழுக்கட்டை (Kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு டம்ளர் இட்லி அரிசியை கழுவி தேவையான நீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊறவிடவும். ஒரு முற்றிய தேங்காயை முழுவதும் துருவி வைத்துக் கொள்ளவும்.கிரைண்டரில் துருவிய தேங்காயை சேர்த்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி அரைக்கவும்.மசிந்ததும் ஊற வைத்த அரிசியை அதனுடன் சேர்த்து சற்று கொரகொரப்பாகஅரைத்து எடுக்கவும்.
- 2
ஒரு வாணலியில் குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 2 ஸ்பூன் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும். 8 வரமிளகாய் கிள்ளிப்போட்டு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும் அரைத்த கொழுக்கட்டை மாவை அதில் ஊற்றி நன்கு வதக்கவும். உருண்டை பிடிக்கும் அளவுக்கு பஞ்சுபோல் வதக்கவும்
- 3
மாவை உருண்டையாக கையில் பிடித்து கொழுக்கட்டை போல் செய்து இட்லி பானையில் ஆவியில் வைத்து வேக விடவும். 10 நிமிடம் வேக விடவும். சுவையான உப்பு தேங்காய் காரகொழுக்கட்டை தயார்.இன்று எங்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்திக்கு இந்த முறையில் கொழுக்கட்டை செய்தோம். நீங்களும் செய்து பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)
#steam இன்று விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை செய்தோம். Manju Jaiganesh -
-
-
அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
#steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்மணி கொழுக்கட்டை. BhuviKannan @ BK Vlogs -
கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steam வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது நம் உடலுக்குத் தேவையான நிறைய தாது உப்புக்களை உள்ளடக்கியது Nithyavijay -
-
-
-
-
அரிசி கொளுக்கட்டை (Arisi kolukattai recipe in tamil)
அரிசி ஒரு உழக்கு கடலை பருப்பு 50கிராம் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறப்போட்டு ரவை பக்குவத்தில் உப்பு போட்டு அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, வரமிளகாய் 4கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து மாவை கெட்டியாக கிண்டி தேங்காய் பூஅரைமூடி போட்டு பிசைந்து கொளுக்கட்டைப் பிடித்து ஆவியில் வேகவிடவும். ஒSubbulakshmi -
-
-
-
-
-
உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)
#steam #india2020விநாயகர் சதுர்த்தி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமலா... உளுத்தம் பருப்பு கார் கொழுக்கட்டை எப்படி செய்வது... அருமையான வழிமுறை Saiva Virunthu -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)