தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
4நபர்கள்
  1. 100கிராம் அரிசி மாவு
  2. 100கிராம் கள்ள பருப்பு
  3. 1சின்ன மூடி தேங்காய்
  4. 3சின்ன அச்சு வெல்லம்
  5. 3ஏலக்காய்
  6. சால்ட்
  7. ஆயில்

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் 3விசில் விடவும்.

  2. 2

    பருப்பு ஆரியதும் தண்ணியை வடித்து மிக்சியில் கொரகொரவென அரைக்கவும்.

  3. 3

    ஒரு வாணலியில் துருவிய தேங்காயை வாசம் வரும் வரை வதக்கவும்.

  4. 4

    அடுத்து பொடித்த வெல்லம் போட்டு, கையில் உருட்டும் பதத்திற்க்கு பாகு காய்ச்சவும்.

  5. 5

    வருத்த தேங்காயுடன், பொடித்த ஏலக்காய், அரத்த பருப்பு, வெல்லப்பாகு சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

  6. 6

    இதை ஸ்டவ்வில் வைத்து கிளரவும். பூர்ணம் கெட்டியாகும் வரை கிளரி இறக்கவும்.

  7. 7

    ஒரு பவுலில் அரிசிமாவு, உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

  8. 8

    அதில் கொதித்த தண்ணீர் ஊற்றி கிண்டவும். இதை முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும். (பச்சரிசியை கழுவி காயவைத்து மில்லில் அரைத்த மாவு.)

  9. 9

    கொழுக்கட்டை அச்சில் ஆயில் தடவி, அதில் மாவை உருட்டி வைத்து உள்ளே அப்லை பண்ணவும்.

  10. 10

    அதன் நடுவில் பூர்ணம் வைத்து, அதன்மேல் மாவு வைத்து மூடவும்.

  11. 11

    இதை பத்து நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். ரொம்ப சாஃடான மோதகம் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes