குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா

The.Chennai.Foodie
The.Chennai.Foodie @cook_26203434
Chennai

குழந்தைகளுக்கு சில்லி பரோட்டா ரொம்ப பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே எளியமுறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வெங்காயம்
  2. தக்காளி
  3. பச்சை மிள்காய்
  4. குடமிளகாய்
  5. டொமட்டோ சாஸ்
  6. அஜினமோட்டோ
  7. சில்லி பவுடர்
  8. கரம் மசாலா பவுடர்
  9. எலுமிச்சை ஜூஸ்
  10. எண்ணெய்
  11. உப்பு
  12. ஸ்பிரிங் ஆனியன் அல்லது கொத்தமல்லி தழை அலங்கரிக்க

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம், குடமிளகாய், தக்காளியை நீளவாக்கி வெட்டிகொள்ளவும்

  2. 2

    ஸ்பிரிங் ஆனியன், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

  3. 3

    பரோட்டாவை உதிர்த்து கொள்ளவும்

  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, டொமட்டோ சாஸ், குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
    தேவைக்கு உப்பு சிறிது அஜினமோட்டோ சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நேரம் சிம்மில் வைக்கவும். நன்கு மசிந்து விடும்.

  5. 5

    அடுத்து அதில் கரம்மசாலா, சில்லி பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும். அடுத்து பொடியாக உதிர்த்த பரோட்டாவை சேர்த்து நன்றாக கலந்து விடவும். புளிப்பு தேவையென்றால் 1-2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்

  6. 6

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன் தூவி அலங்கரித்து பரிமாறவும். சுவையான சில்லி பரோட்டா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

The.Chennai.Foodie
The.Chennai.Foodie @cook_26203434
அன்று
Chennai
Instagram handle: the.chennai.foodie
மேலும் படிக்க

Similar Recipes