அக்கி ரொட்டி (Akki rotti recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

அக்கி ரொட்டி (Akki rotti recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப் அரிசி மாவு
  2. 4 டேபிள்ஸ்பூன் துருவிய கேரட்
  3. 3 டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்
  4. 1 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலை
  5. உப்பு
  6. தேவையானஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும் மற்றொரு பாத்திரத்தில் துருவிய கேரட்,நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலையை ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்து அரிசி மாவுடன் சேர்க்கவும் (விருப்பப்பட்டவர்கள் இதில் நறுக்கிய வெந்தயக்கீரை, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யலாம்)

  2. 2

    உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பட்ட சீட்டில் எண்ணை தேய்த்து சிறு உருண்டையாக எடுத்து கையில் எண்ணை தேய்த்து படத்தில் காட்டியவாறு வட்டமாக மெல்லிதாக தட்டிக் கொள்ளவும்

  4. 4

    தோசை சட்டியை சூடு செய்து தோசை சட்டி சூடானதும் பட்டை தீட்டி அதன் மேல் வைக்கவும் சட்டி சூடானதும் மேலிருக்கும் பட்டர் சீட்டை மெதுவாக எடுக்கவும் இப்பொழுது இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்

  5. 5

    படத்தில் காட்டியவாறு இருபக்கமும் நன்கு சிவந்து வரும் பொழுது எடுக்கவும்

  6. 6

    அக்கி ரொட்டி தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, காரச் சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes