வெண்டைக்காய் மாங்காய் மண்டி

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 1/2 கிலோ வெண்டைக்காய்
  2. 10 சின்ன வெங்காயம்
  3. 10 பல் பூண்டு
  4. 25 கிராம் புளி
  5. அரிசி கலந்த தண்ணி 1டம்ளர்
  6. 1ஸ்பூன் பச்சரிசி மாவு
  7. 1/2 மாங்காய்
  8. 8பச்சை மிளகாய்
  9. 1/4 டீஸ்பூன் மஞ்சள்
  10. உப்பு தேவையான அளவு
  11. 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  12. தாளிக்க
  13. 1/2 டீஸ்பூன் கடுகு
  14. 1/2 டீஸ்பூன் உளுந்து
  15. ஒரு கொத்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும்.ஒரு நான் ஸ்டிக் பேனில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு அங்குலம் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் பிசுபிசுப்பு தன்மை போக வறுத்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    அரிசி களைந்த தண்ணீரை தனியாக எடுத்து வைத்தாள் மண்டி மாதிரி கிடைக்கக்கூடிய தண்ணியை எடுத்து உபயோகிக்கவும். புளியை தண்ணீரில் ஊற போடவும்.

  3. 3

    இப்போது அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து பச்சை மிளகாய் வெங்காயம் பூண்டு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி பிறகு தக்காளி, உப்பு, சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

  4. 4

    தக்காளி மசிந்ததும் புளி தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு அரிசி களைந்த தண்ணீர் சேர்த்து மேலும் ஒரு இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும்

  5. 5

    பிறகு மாங்காய், வெண்டைக்காய் சேர்க்கவும் இரண்டு கொதி விடவும். ஒரு ஸ்பூன் அரிசி மாவை அரைடம்ளர் தண்ணீரில் கலந்து இதில் ஊற்றவும். தண்ணீர் பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.

  6. 6

    தண்ணீராகவும் இருக்கக் கூடாது கெட்டியாகவும் இருக்கக் கூடாது. அரிசிமாவு சேர்ப்பதனால் சற்று சேர்ந்தாற்போல வரும். மிதமான தீயில் மூடி போட்டு 3 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.

  7. 7

    தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள பிரமாதமாக இருக்கும் இந்த வெண்டைக்காய் மண்டி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes