ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

ராகி இனிப்பு உருண்டை சிறுவயது முதல் என்னுடைய ஃபேவரிட். இரும்பு சத்து மிகுந்தது. இதன் சுவை எனது குழந்தைகளுக்கும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கும்.

ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka

ராகி இனிப்பு உருண்டை சிறுவயது முதல் என்னுடைய ஃபேவரிட். இரும்பு சத்து மிகுந்தது. இதன் சுவை எனது குழந்தைகளுக்கும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1:30மணி நேரம்
3 பேர்
  1. ராகி மாவு 2 கப்
  2. துருவிய வெல்லம் (அ) நாட்டுச்சர்க்கரை 3/4 கப்
  3. வேர்க்கடலை 1/2 கப்
  4. கருப்பு எள் 1/2 கப்
  5. தேங்காய் துருவல் 1 கப்
  6. ஏலக்காய் 3 (அ) 4

சமையல் குறிப்புகள்

1:30மணி நேரம்
  1. 1

    வேர்க்கடலை மற்றும் எள்ளை தனித்தனியாக வறுத்து எடுத்து வேர்க்கடலையை தோல் நீக்கிக்கொள்ளவும்.

  2. 2

    கேழ்வரகு மாவை இரண்டு சிட்டிகை உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவதை விட சற்று தளர்வாக பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    தோசைக்கல்லை சூடாக்கி சற்று கனமான அடைகளாக தட்டிக்கொள்ளவும்.

  4. 4

    அடைகள் ஆறிய பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

  5. 5

    வெட்டிய துண்டுகளை மிக்ஸியில் மிருதுவாக அரைக்கவும். பிறகு, வேர்க்கடலை, எள், வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து பல்ஸ் மோடில் 5 சுற்றுகள் சுற்றி எடுக்கவும். இந்த கலவையில் தேங்காயை சேர்த்து கலக்கவும்

  6. 6

    இப்பொழுது இதை உருண்டைகளாக பிடித்து பரிமாறலாம். அல்லது கிண்ணத்தில் வைத்து புட்டு மாதிரியும் பரிமாறலாம். இந்த ராகி இனிப்பு உருண்டை மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

கமெண்ட் (3)

parvathi b
parvathi b @cook_0606
Hi ! Excellent recipe. Add #Karnataka to it . We have Karnataka recipes contest going on .

Similar Recipes