சமையல் குறிப்புகள்
- 1
2வாழைக்காயை தோல் சீவி நறுக்கி தண்ணீரில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வேக விடவும். வெந்ததும் தண்ணீரை வடித்து விடவும்.4 பல் பூண்டு 1 பெரிய வெங்காயம் கழுவி தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். 1 தக்காளியை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
1 கப் தேங்காய் துருவல் எடுத்து வைக்கவும். கடாயில் 1டீஸ்பூன் ஆயில் விட்டு 1 டீஸ்பூன் தனியா, 1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் வெந்தயம், 4 வர மிளகாய், 4 சின்ன வெங்காயம், 2 பல் பூண்டு வதக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து விடவும்.
- 3
அதனுடன் துருவிய தேங்காய் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு புளி சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து விடவும்.
- 4
3 டேபிள்ஸ்பூன் ஆயில் விட்டு 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு சிறிது கறிவேப்பிலை தாளித்து நறுக்கி வைத்த பூண்டு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விடவும். அதனுடன் நறுக்கிய தக்காளி ஒன்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
வாழைக்காயை சேர்த்து வதக்கி அரைத்து வைத்த பொடியை மேலே தூவி விடவும். நன்கு வதக்கி விடவும்.
- 6
அடுப்பை சிம்மில் வைத்து பிரட்டி மூடிவிடவும். இரண்டு முறை திறந்து கிளறி விட்டு நன்கு சுருண்டு வரும் வரை அடுப்பில் வைத்து பிறகு இறக்கி விடவும். சுவையான மங்களூர் ஸ்டைல் வாழைக்காய் சப்ஜி ரெடி😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரட்,சென்னா மசாலா
#vattaram#week9ஈரோட்டில்,ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள்அல்லது வேலை பார்ப்பவர்களுக்கு,ஞாயிறன்று வழங்கப்படும், இந்த பிரட், சென்னா மசாலா மிக பிரபலம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (10)