🌿🌿 ☘️செங்கீரை பொரியல்🌿🌿☘️ (Senkeerai poriyal recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

செங்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. செங்கீரை கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கண்டிப்பாக வாரம் ஒரு முறை சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #ilovecooking

🌿🌿 ☘️செங்கீரை பொரியல்🌿🌿☘️ (Senkeerai poriyal recipe in tamil)

செங்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. செங்கீரை கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கண்டிப்பாக வாரம் ஒரு முறை சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #ilovecooking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
5 பேர்
  1. 1 ஒரு கட்டு செங்கீரை
  2. 1 டீஸ்பூன் உப்பு
  3. 5காஞ்ச மிளகாய்
  4. சிறிதளவுகடுகு உளுந்து
  5. 2 ஸ்பூன் எண்ணெய்
  6. 1பெரிய வெங்காயம்
  7. 1/2 துருவிய தேங்காய்
  8. 1சிட்டிகை வெல்லம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கீரையை அலசி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் மிளகாயை போட்டு வதக்கவும்.

  3. 3

    வதங்கியவுடன் கீரையை சேர்க்கவும்.

  4. 4

    ஒரு நிமிடம் கழித்து உப்பு சிறிதளவு வெல்லம் சேர்க்கவும்.

  5. 5

    4 நிமிடம் கழித்து கீரை நன்றாக வெந்திருக்கும் அதனுடன் தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  6. 6

    சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைத்து. மூன்று நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.

  7. 7

    இப்பொழுது சூடான சுவையான செங்கீரை பொரியல் ரெடி ஆகிவிட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes