காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோகாளான் -
  2. 2 கப்சீரக சம்பா அரிசி -
  3. 2பெரிய வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 3 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  6. 1/4 கப்கொத்துமல்லி இலை
  7. 1/4 கப்புதினா இலை
  8. 3 மேசைக்கரண்டிஎண்ணெய்
  9. 3 மேசைக்கரண்டிநெய்
  10. 2 தேக்கரண்டிமிளகாய் தூள்
  11. 2 தேக்கரண்டிமல்லி தூள்
  12. 1பிரியாணி இலை
  13. 3ஏலக்காய்-
  14. 2லவங்கம்
  15. 5கிராம்பு
  16. 3 கப்தண்ணீர்
  17. உப்பு -தேவையான அளவு
  18. 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    முதலில் காளானை நன்கு கழுவ வேண்டும்.பின் அதனை சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும்.அதே சமயம் அரிசியை நீரில் ஊற வைக்க வேண்டும்.

  2. 2

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு,ஏலக்காய், இலவங்கம் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும் பிறகு அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய்,கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்க வேண்டும்.பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

  3. 3

    தக்காளியானது நன்கு வதக்கியதும் காளானை போட்டு பிரட்டி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்கு கிரேவி போன்று வரும் வரை கொதிக்க வைக்கவேண்டும்.

  4. 4

    பின் அதில் அரிசியை கழுவி போட்டு 3 கப் தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.வேகவைத்த பிறகு தம் போட்டு இறக்கினால் சுவையான காளான் பிரியாணி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes