காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL#

காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)

சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL#

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 1காலிஃப்ளவர்
  2. இரண்டுவெங்காயம்
  3. இரண்டுதக்காளி
  4. 1 தே.க இஞ்சி பூண்டு விழுது
  5. கறிவேப்பிலை - சிறிதளவு
  6. தாளிக்க
  7. சிறிய துண்டுபட்டை
  8. இரண்டுபிரிஞ்சி இலை
  9. ‌நான்குகிராம்பு
  10. 1அண்ணாச்சி பூ
  11. 1 ‌தே.கசோம்பு
  12. 1/2 தே‌.கசீரகம்
  13. அரைக்க வேண்டிய பொருட்கள்
  14. இரண்டு மேஜைக்கரண்டிபொட்டுக்கடலை
  15. மூன்றுபச்சை மிளகாய்
  16. 1 தே.கசோம்பு
  17. - நான்குகிராம்பு
  18. இரண்டுஏலக்காய்
  19. சிறிய துண்டுபட்டை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சுடு தண்ணீரில் மஞ்சள் சேர்த்து நறுக்கிய காலிஃப்ளவரை சிறிது நேரம் கொதிக்க விடவும், பிறகு மற்றோரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும்.

  2. 2

    என்ணெய் காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும், பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும், அதன்பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  3. 3

    தக்காளி சேர்த்து ‌மசியும் வரை வதக்கவும்,‌ வதங்கியதும் காலிஃப்ளவர் சேர்த்து பதினைந்து நிமிடங்கள் வதக்கவும்.

  4. 4

    பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும், பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரவை
    இயந்திரத்தில் சேர்த்து ‌மைய அரைத்து ‌எடுக்கவும்.

  5. 5

    அரைத்த கலவையை ஊற்றி இருந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  6. 6

    தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்தால் சுவையான காலிஃப்ளவர் குருமா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes