செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#coconut
செட்டிநாடு சிக்கன் ரெசிபி பார்த்து நிறைய பண்ணியிருக்கேன்.ஆனால் இந்த செட்டிநாடு சிக்கன் ரெசிபி ரொம்ப டேஸ்டா ஹோட்டல் ஸ்டைல்ல இருந்தது ரொம்ப சூப்பரா இருந்தது. நீங்களும் சமைத்து பாருங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3-4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 1/2 கப் தேங்காய்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1/4டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1டீ ஸ்பூன் தனி மிளகாய் தூள்(விிிிிிிிிி விருப்பப்பட்டால்)
  8. 1டீ ஸ்பூன் தனியா தூள்
  9. 2 ஸ்பூன் எண்ணெய்
  10. 1டீ ஸ்பூன் சோம்பு
  11. 1டீ ஸ்பூன் சீரகம்
  12. 1டீ ஸ்பூன் மிளகு
  13. 3 வற்றல் மிளகாய்
  14. 2பிரிஞ்சி இலை
  15. 1/4டீ ஸ்பூன் தலா பட்டை கிராம்பு ஏலக்காய் ஸ்டார் பூ தூள்கள்
  16. 3 ஸ்பூன் தயிர்
  17. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    .கடாயில் 1 t ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தனியா சீரகம் சோம்பு பிரிஞ்சி இலை வற்றல் மிளகாய் பட்டை கிராம்பு ஏலக்காய் தேங்காய் சேர்த்து சிறிது நேரம் நன்றாக வதக்கி ஆறவிடவும்

  2. 2

    மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின் தக்காளியை சேர்த்து வதக்கவும் தயிர் மற்றும் சிக்கன் துண்டுகளை சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் தனி மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

  4. 4

    கரகரப்பாக அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்க்கவும். கல்பாசி சேர்த்து குக்கரை மூடி வேக விட்டு அடுப்பை அணைக்கவும். தண்ணீர் இருந்தாள் வற்ற விடவும் மல்லி தழை கருவேப்பிலை தூவி தண்ணீர் வற்றிய பின்பு அடுப்பை அணைக்கவும்

  5. 5

    ஹோட்டல் ஸ்டைல் சூப்பரான செட்டிநாடு சிக்கன் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes