தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)

#Pooja
இது பாலில் அரிசியை வேக வைத்து செய்த தயிர் சாதம்.எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வழக்காமாக சமையல் செய்யும் ஐயர் சொல்லி குடுத்த முறை.இப்படி செய்தால் சீக்கிரம் தயிர் சாதம் புளிக்காது என்று அவர் சொன்னார்.கோவில்களுக்கு எடுத்து செல்லும் போது,அல்லது டூர் செல்லும் போது இப்படி செய்து எடுத்து செல்லலாம் , நன்றாக இருக்கும்.சீக்கிரம் புளிக்காது.
தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
#Pooja
இது பாலில் அரிசியை வேக வைத்து செய்த தயிர் சாதம்.எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வழக்காமாக சமையல் செய்யும் ஐயர் சொல்லி குடுத்த முறை.இப்படி செய்தால் சீக்கிரம் தயிர் சாதம் புளிக்காது என்று அவர் சொன்னார்.கோவில்களுக்கு எடுத்து செல்லும் போது,அல்லது டூர் செல்லும் போது இப்படி செய்து எடுத்து செல்லலாம் , நன்றாக இருக்கும்.சீக்கிரம் புளிக்காது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக அரிந்து கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக அரிந்து கொள்ளவும். கடுகு, உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி எடுத்து வைத்துக் கொள்ளவும். உடனே சாப்பிடுவது என்றால் கால் கப் அளவு புளிகாத தயிர் எடுத்துக் கொள்ளவும். வெளியூருக்கு எடுத்து செல்வது என்றால் ஒரு ஸ்பூன் க்கும் குறைவாக தயிர் சேர்த்தால் போதும். அதாவது 5 to 6 மணி நேரம் கழித்து சாப்பிடுவது என்றால் கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் தயிர் போதும்.
- 2
அதாவது புளிப்புக்கு ஏற்றவாறு தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கப் அரிசிக்கு 4 கப் காய்ச்சிய பாலை அதில் சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும். அரிசி வெந்தவுடன் கரண்டி கொண்டு அதை நன்கு மசித்து விடவும்.பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சாதத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் தயிர் கொஞ்சம் சேர்த்து கலந்து கொள்ளவும். நான் ஒரு ஸ்பூன் வெண்ணை இதனுடன் சேர்த்துக் கொண்டேன். சாதம் மிகவும் அருமையாக க்ரீமியாக இருக்கும். எல்லாவற்றையும் நன்கு கலந்து கொள்ளவும் கடைசியாக பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை நிறைய சேர்த்துக் கொள்ளவும். சுவையான தயிர் சாதம் தயார். (தயிர் சாதம் செய்து உபயோகிக்கும் நேரத்தைப் பொறுத்து தயிர் சேர்த்துக் கொள்ளவும்.)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சரிசி எலுமிச்சை சாதம் 🍋 (Pacharisi elumichai satham recipe in tamil)
#poojaசுவாமி நைவேத்தியத்திற்கு எப்படி வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்ப்பது இல்லையோ அதேபோல் புழுங்கல் அரிசி சாதமும் சேர்க்க மாட்டோம். விரத நாட்களில் பச்சரிசி சாதம் மட்டுமே செய்வோம். மற்றும் வெறும் நாட்களில் புழுங்கல் அரிசியில் இதுபோன்ற கலவை சாதம் செய்வோம்.புழுங்கல் அரிசியை விட பச்சரிசியில் புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், செய்யும் போது சுவை அதிகமாக இருக்கும். தயிர் சாதத்திற்கு பச்சரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து கொஞ்சமாக தயிர் சேர்த்து இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் தாளித்து சாதம் கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
பச்சரிசி தேங்காய் சாதம் (Pacharisi satham recipe in tamil)
#poojaஇந்தத் தேங்காய் சாதத்தில் முந்திரிப்பருப்பு அல்லது வறுத்த வேர்க்கடலை சேர்த்து தாளித்து கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்வார்கள். Azhagammai Ramanathan -
-
பசும் தயிர் சாதம்
#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம் Jaya Kumar -
பச்சரிசி தயிர் சாதம்
#combo4வெயிலுக்கு ஏற்ற அட்டகாசமான தயிர் சாதத்தை எளிமையாக செய்யும் முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)
தயிர் சாதத்தில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் .மேலும் வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணித்து உடலுக்கு வெயிலினால் இழக்கும் சக்தியை பெற்று தரும். உடனடியாக சாப்பிடுவது என்றால் அரை கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும் காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் கால் ஸ்பூன் தயிர் மட்டும் பாலில் சேர்த்து கலந்து சாதம் செய்யவும். Meena Ramesh -
-
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
-
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#millet குதிரைவாலி தயிர்சாதம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதேபோன்றே சாமை,வரகு அரிசி களில் செய்யலாம். Siva Sankari -
டோமொடோ பாத்🍅 (Tomato bath recipe in tamil)
#karnatakaசாதம் வடித்த பிறகு தக்காளி சாதம் செய்ய வேண்டி வந்தால் இது போல் செய்யலாம். இப்படி செய்யலாம் என்று இந்த தக்காளி சாதம் செய்யும் முறையை பெங்களூரில் வசிக்கும் என்னுடைய தோழி எனக்கு சொல்லி கொடுத்தார்கள். ஸ்கூலுக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். தேவையான அளவு சாதம் இதற்கு பயன்படுத்தி கொண்டு மீதி சாதத்தில் தயிர் சாதம் அல்லது வேறு ஏதாவது சாதம் தயார் செய்து கொடுக்கலாம். ஆபீஸ் எடுத்து செல்லவும் ஏற்ற சாதம். Meena Ramesh -
-
-
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
எலுமிச்சை சாதம் (lemon rice recipe in Tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு எலுமிச்சை சாதம், தயிர்சாதம் புளிசாதம் செய்து படைப்பார்கள் . ஆதலால் இன்று எலுமிச்சை சாதம் தயிர் சாதம் செய்து படைத்தோம். Azhagammai Ramanathan -
தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும் Sudharani // OS KITCHEN -
தஹி சேமியா(தயிர் சேமியா)🍚
#nutrient1 # bookதயிர் பால் சம்பந்தப்பட்ட உணவு ஆகும். 100 கிராம் தயிரில் 11 கிராம் புரோட்டீன் உள்ளது. புரொடின் செரிந்துள்ளது மட்டுமல்லாமல் கால்சியம் சத்து ( 100gm/8./.) தயிரில் அதிகம் உள்ளது. விட்டமின் A அதிகம் உள்ளது. சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், கோபாலமின், மெக்னீசியம் போன்ற இதர தாதுக்களும் இதில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு 17 கிராமம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 8 கிராமம் உள்ளது. நல்ல கிருமி களை உருவாக்கி ஜீரண சக்திக்கு சிறப்பான உணவாக இருக்கிறது. பகலில் உணவில் தயிரை சேர்த்து கொள்வதை விட இரவில் சர்க்கரை சேர்த்தோ அல்லது கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடுவது ஜீரண மண்டலத்தை சாந்தப்படுத்தும்.பாலில் உள்ள புரதச்சத்தை விட தயிரில் புரதச் சத்து அதிகம் உள்ளது. Yogurt அல்லது தயிர் ஒரு சிறந்த probiotic ஆக செயல்படுகிறது. உடலில் நல்ல கிருமிகள் உருவாக காரணமாகிறது. இந்த நல்ல மற்றும் பயனுள்ளகிருமிகள் நம் அன்றாட செயல் திறனை ஊக்குவிக்கிறது. ஜீரண உறுப்புகளை இலகுவாக்கி மல பிரச்சினைகளை போக்குகிறது. வயிற்றுப்போக்கு சமயத்தில் மோர் தயிர் எடுத்துக் கொள்வது உடலுக்கு இழந்த நீர் சக்தியை சக்தியை மீட்டுக் கொடுத்து உடல் சோர்வை நீக்குகிறது.நாம் தினமும் நம் உணவில் கட்டாயம் தயிரினை சேர்த்துக்கொள்ளவேண்டும் குழந்தைகளுக்கும் தயிர் கொடுத்து சிறப்பான உணவு பழக்கத்தை உருவாக்கித் தர வேண்டும் . இந்த தயிர் சேமியாவில் முந்திரிபருப்பு, உலர் திராட்சை மாதுளை பழம் சேர்த்து செய்து இருப்பதால் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. Meena Ramesh -
தயிர் சாதம் (thayir saatham recipe in tamil)
#goldenapron3#week12மாட்டுப் பொங்கல் தினத்தில் கொண்டாடப்படும் கணு பண்டிகையில் ஸ்பெஷல் தயிர் சாதம் Nandu’s Kitchen -
கலவை பயறு பருப்பு சுண்டல்💪
#nutrient1 #bookஇந்த வகை சுண்டல் கடலை பருப்பு மற்றும் பாசிப் பயிறு கொண்டு செய்த புரதச்சத்து நிறைந்த கல் ஆகும். இவற்றை வேக வைத்து தண்ணீரை வடித்து அதில் சூப் வைத்து குடிக்கலாம்.😍 Meena Ramesh -
தயிர் சாதம்
#cook with milk. வேக வைத்து வடித்த சாதம்ஆற வைத்து நன்குமசித்து கொண்டு உப்பு சேர்த்துகெட்டியான புளிப்பு இல்லாத தயிர் சேர்த்து கொள்ளவும் பிறகு ஆயில் ஊற்றி கடுகு கடலை பருப்பு உழுந்தம் பருப்பு சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து சாதத்துடன் கலந்து மல்லி இழை சேர்த்து பரிமாறும் போது தயிர் சாதத்தின் சுவையே வேறுஅற்புதமான தயிர்மணக்க மணக்க தயிர் சாதம் தயார் Kalavathi Jayabal -
சுட்ட கத்திரிக்காய் தயிர் பச்சடி/ sutta katrikai thayir pachadi recipe in tamil
#milk - week 3 - தயிர் வைத்து நிறைய விதமாக பச்சடிகள் செய்யலாம்.. ஒரு வித்தியாச சுவையில் சுட்ட கத்திரிக்காய் வைத்து செய்துள்ளேன்... Nalini Shankar -
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir saatham recipe in tamil)
#lndia2020 குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம் இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் Nithyavijay -
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
-
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali
More Recipes
- தாமரை பூ விதை பாயாசம் (Thaamarai poo vithai payasam recipe in tamil)
- கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
- பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
- புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
- அவல் கேசரி (Aval kesari recipe in tamil)
கமெண்ட் (4)