உருளைக்கிழங்கு ரோல்

#kids1 மைதா உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அதை தவிர்த்து கோதுமை மாவில் இதை செய்துள்ளேன்
உருளைக்கிழங்கு ரோல்
#kids1 மைதா உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அதை தவிர்த்து கோதுமை மாவில் இதை செய்துள்ளேன்
சமையல் குறிப்புகள்
- 1
மேல் மாவு செய்ய: கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து உருக்கிய பட்டர் அல்லது வனஸ்பதி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பூரணம் செய்ய: உருளைக்கிழங்கு ஐ ஆவியில் 90 சதவீதம் வேகவிடவும் (கட்லட் கபாப் ரோல் இதற்கெல்லாம் உருளைக்கிழங்கு ஐ பொதுவா குக்கரில அல்லது நேரடியாக தண்ணீரில் போட்டு வேகவிடாமல் ஆவியில் வேக விட்டு மசித்தால் நன்றாக இருக்கும்) பின் தோல் உரித்து கைகளால் பொடித்து வைக்கவும் வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி தழை ஆகியவற்றை தனித்தனியாக மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 3
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், பெருங்காயத்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின் பொடித்த கிழங்கு உப்பு சேர்த்து நன்கு கிளறவும் பின் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
- 5
பின் பிசைந்து ஊறவைத்த மாவை நன்கு அடித்து பிசைந்து கொள்ளவும் பிசைந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் அதை வரமாவில் புரட்டி மெல்லியதாக தேய்க்கவும்
- 6
பின் அதை சதுர ஷேப்பில் கட் செய்து கொள்ளவும் உருளைக்கிழங்கு ஐ நன்கு பிசைந்து நீளவாக்கில் உருட்டி படத்தில் காட்டியவாறு மாவின் ஒரு முனையில் இருந்து இரண்டு புறமும் ஒரங்களை விட்டு நடுவில் வைக்கவும் (மாவோட நடுவில் இல்லைங்க படத்தில் காட்டியவாறு ஓரங்கள் விட்டு நடுவில் வைக்கவும்)
- 7
பின் மெதுவாக உருட்டி கொள்ளவும் இறுதியில் சிறிது தண்ணீர் தொட்டு தடவி ஒட்டவும் அதே போல் ஓரங்களையும் தண்ணீர் தொட்டு தடவி ஒட்டவும் படத்தில் காட்டியவாறு செய்யவும்
- 8
இவ்வாறு தேவையான அளவு ரோல் களை செய்து கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் போடவும்
- 9
அடுப்பை மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும் பின் மெதுவாக திருப்பி விடவும் பின் இரண்டு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 10
சுவையான உருளைக்கிழங்கு ரோல் ரெடி சாஸ் உடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு வடை
#goldenapron3#book#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் மளிகை பொருட்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் உளுத்தம்பருப்பு இல்லாமல் உருளைக்கிழங்கு பயன்படுத்தி வடை செய்துள்ளேன். குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்கும் போது இந்த வடை மிகவும் எளிதாக செய்து விடலாம். எதையும் ஊற வைக்க தேவை இல்லை. யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை உருளைக்கிழங்கில் செய்தது என்று உளுந்து வடை போன்றே இருந்தது. நன்றி Kavitha Chandran -
ரவா தோசை type 2
#GA4மைதா விற்கு பதில் இதில் கோதுமை மாவு சேர்த்துள்ளேன். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்
#leftoverவீட்டில் மீதமான பிஸ்கட் ஐ வைத்து சுவையான குழந்தைகள் விரும்பும் ஒரு கேக் பிஸ்கட் பயன்படுத்தி இருப்பது சொன்னால் மட்டுமே தெரியும் சுவையில் அலாதியானது Sudharani // OS KITCHEN -
-
-
உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்
#lockdown#goldenapron3இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டுருக்காங்க நம்ம அரசாங்கம். அதை பற்றி செய்தி வெளியிட்டதுமே நான் அத்தியாவசியத் தேவைக்கான சாமான்களை வாங்கி வைத்துவிட்டேன். முதலில் நான் வாங்கியது உருளைக்கிழங்கு தான். ஏனெனில் அதுவே நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். பிள்ளைகள் ஸ்னாக்ஸ் கேட்டார்கள் நான் உருளைக்கிழங்கு பயன்படுத்தி எளிமையான முறையில் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்து கொடுத்தேன். அதில் மிளகு சீரகத்தை தூள் செய்து சேர்த்தால் வயிற்று கோளாறுகள் ஏற்படாது இந்த வெயில் காலமென்றாலும். ஏனெனில் மிளகு சீரகம் சேர்த்ததுனால் எதிர்ப்பு சக்தி தான். அத்துடன் எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையை வைத்து வித்தியாசமாக சிப்ஸ் மற்றும் பக்கோடா செய்துள்ளேன். Sharmila Suresh -
-
மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠
#vattaram கோதுமை சமோசா உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
சோயா சங்ஸ் புலாவ்
#ONEPOTசோயாவில் நிறைய புரத சத்துகள் இருக்கிறது.. உடலுக்கு மிகவும் நல்லது.. Nithyakalyani Sahayaraj -
-
Yam stuffed wheat fried momos(கோதுமை மோமோஸ்) (Wheat fried momos recipe in tamil)
#flour1 #wheat கோதுமை உடம்பிற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது. Aishwarya MuthuKumar -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
வெண்பொங்கல்
#Grand2பண்டிகை என்றாலே காலையில தமிழ்நாட்டில அதிக அளவில் இட்லி மற்றும் வெண்பொங்கல் மெதுவடை அடுத்ததா பூரி கிழங்கு மசாலா மொறு மொறு தோசை இது எல்லாம் தவறாமல் இடம் பிடிக்கும் அதுல மிகவும் எளிய முறையில் அரைமணி நேரத்தில சுடச்சுட வெண்பொங்கல் கூட மெதுவடை செய்யலாம் Sudharani // OS KITCHEN -
மஷ்ரூம் பப்ஸ்
#Everyday4மாவை ரெடி செய்ய மட்டும் தான் கொஞ்சம் டைம் எடுக்கும் பட்டர் விட வனஸ்பதி நன்கு லேயர் லேயராக வரும் மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
வாழைப்பூ பக்கோடா
#kids1வாழைப்பூ சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாழைப்பூ பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் வராது. குழந்தைகளுக்கு வாழைப்பூவை இதுமாதிரி பக்கோடாவாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam
More Recipes
கமெண்ட்