பூந்தி லட்டு

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#deepavali# தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பலகாரங்கள். இனிப்பு வகைகளில் முதன்மை வாய்ந்தது லட்டு,சுலபமாக செய்யக்கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடுவது.

பூந்தி லட்டு

#deepavali# தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பலகாரங்கள். இனிப்பு வகைகளில் முதன்மை வாய்ந்தது லட்டு,சுலபமாக செய்யக்கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடுவது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
17 நபர்கள்
  1. பூந்தி செய்வதற்கு தேவையான பொருட்கள்
  2. கடலை மாவு - 1.5 கப்
  3. தண்ணீர் - 1 கப்
  4. எண்ணெய் - பொரிப்பதற்கு
  5. சர்க்கரை பாகு செய்வதற்கு தேவையான பொருட்கள்
  6. சர்க்கரை - ஒன்னே முக்கால் கப்
  7. தண்ணீர் - முக்கால் கப்
  8. அலங்கரிக்க
  9. நெய் - 2 தே.க
  10. முந்திரிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
  11. உலர் திராட்சை - 2 மேஜைக்கரண்டி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் கடலை மாவு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி தோசைமாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். (அதிகமாக தண்ணீர் சேர்க்காமலும், கெட்டியாக இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் முத்து முத்தாக பூந்தி பொரிக்க முடியும்)

  2. 2

    தேவைப்பட்டால் நிறத்திற்காக மஞ்சள் தூள் அல்லது மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3
  4. 4

    சர்க்கரை பாகு செய்வதற்கு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறி விடவும்.

  5. 5

    பாகு பதம் மிகவும் முக்கியம் ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.

  6. 6

    ஓட்டை போட்ட கரண்டியை பயன்படுத்திக் பூந்தியை பொரித்துக் கொள்ளவும்.(என்னை நன்றாக சூடாக இருக்க வேண்டும். பூந்தி போட்டதும் மேலெழும்பி வரும் அளவிற்கு. பூந்தியை முறுகலாக பொரித்து விடக்கூடாது. சில வினாடிகளில்லே எடுத்துவிட வேண்டும், இல்லையெனில் லட்டு பிடிக்க வராது.)

  7. 7
  8. 8

    எல்லா மாவையும் பூந்தியாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சர்க்கரை பாகு சேர்த்து கரண்டி வைத்து நன்றாக கிளறவும்.

  9. 9

    விருப்பப்பட்டால் கலவை எந்த இடத்தில் சிறிது பூந்திகளை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் பூந்தி பிடிக்க ஏதுவாக இருக்கும். அல்லது சர்க்கரை பாகு நன்றாக ஊறியதும் அதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை பருப்புகளை சேர்த்து சிறிது பூந்திகளை எடுத்து நன்றாக அழுத்தி லட்டுகளாக பிடித்துக் கொள்ளவும்.

  10. 10

    தீபாவளியை கொண்டாட லட்டுகள் தயார். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes