வேர்க்கடலை கட்லட் (Verkadalai cutlet recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#GA4 #peanut #week12
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த கட்லட் மிகவும் அருமையாக இருந்தது

வேர்க்கடலை கட்லட் (Verkadalai cutlet recipe in tamil)

#GA4 #peanut #week12
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த கட்லட் மிகவும் அருமையாக இருந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பேர்
  1. 1/2 கப் வறுத்த வேர்க்கடலை
  2. 3வேக வைத்த உருளைக்கிழங்கு
  3. 1பெரிய வெங்காயம்
  4. 3 பச்சை மிளகாய்
  5. சிறிதளவுகொத்தமல்லி
  6. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  8. சிறிதுகருவேப்பிலை
  9. 1/4 கப் பொரி கடலை மாவு
  10. 1/4 கப்கடலை மாவு
  11. 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  12. 1 டீஸ்பூன் வெல்லத்தூள்
  13. தேவையான அளவுஉப்பு
  14. தேவையான அளவுஎண்ணை பொரிக்க

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். வேர்க்கடலையை தோல் நீக்கி ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.

  2. 2

    உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக்கொள்ளவும்

  3. 3

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பிறகு வேர்க்கடலை பொடி கரம் மசாலா தூள் உப்பு மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.

  5. 5

    சற்று ஆறியவுடன் உருண்டைகளாக உருட்டி வேண்டிய வடிவில் செய்து கொள்ளவும்.

  6. 6

    கடலைமாவு பொரி கடலை மாவு அரிசி மாவு சிறிது வெல்லம் சேர்த்துபஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

  7. 7

    காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் கட்லட்டை கடலை மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் சேர்த்துஇருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

  8. 8

    சுடச்சுட சாப்பிட சுவையான வேர்க்கடலை கட்லெட் தயார். இதை தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes