சில்லி முட்டை (Chilli muttai recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

#GA4

week13

சில்லி முட்டை (Chilli muttai recipe in tamil)

#GA4

week13

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. 6 முட்டை
  2. 2 ஸ்பூன் சோள மாவு
  3. இரண்டு ஸ்பூன் மைதா மாவு
  4. ஒரு ஸ்பூன் அரிசி மாவு
  5. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 2 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. ஒரு ஸ்பூன் கரம் மசாலா
  8. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. ஒரு சிட்டிகை சோடா உப்பு
  10. சிறிதளவுகேசரி பவுடர்(தேவைப்பட்டால்)
  11. தேவையானஅளவு உப்பு
  12. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் முட்டைகளை தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும் அது ஆறிய பிறகு உரித்துக் கொள்ளவும்

  2. 2

    முட்டைகளை தேவையான வடிவில் வெட்டி கொள்ளவும்

  3. 3

    ஒரு பௌலில் சோள மாவு,மைதா மாவு,அரிசி மாவு, மிளகாய் தூள் மஞ்சள் தூள்,கரம் மசாலா,உப்பு, கேசரி பவுடர் ஒரு சிட்டிகை சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து சில்லி போடுவதற்கு பதமாக கலந்து கொள்ளவும்

  4. 4

    நறுக்கி வைத்த முட்டையை இந்த கலவையில தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

  5. 5

    இப்பொழுது அருமையான சுவையாக சில்லி முட்டை தயார்😋😋😋

  6. 6

    குறிப்பு இந்த செய்முறையை பின்பற்றி முட்டைக்கு பதிலாக சிக்கன் சேர்த்து சமைக்கலாம்

  7. 7

    குறிப்பு 2 சில்லி முட்டை சமைக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் எண்ணையில் முட்டை வெடிக்க வாய்ப்பு உள்ளது எனவே அடுப்பை விட்டு தள்ளி நின்று பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes