சமையல் குறிப்புகள்
- 1
தண்டுக்கீரை இலைகளை எடுத்து பொடியாக நறுக்கி நன்றாக கழுவிக் கொள்ளவும்.
- 2
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
தேங்காய் விழுதிற்கு தேவையான பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு கரமொரவென அரைக்கவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம் மற்றும் மிளகாய் வற்றல் சேர்க்கவும்.
- 5
பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 6
நன்றாக வதக்கியபின் கீரையை சேர்த்து நன்றாக மிதமான சூட்டில் வதக்கவும்.
- 7
நன்கு வதக்கிய பின் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
- 8
பின்பு தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்.
- 9
ஒரு பாத்திரத்தில் முட்டை, மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 10
முட்டை கலவையை கீரை மசியலில் சேர்த்து நன்றாக கிளறவும்
- 11
முட்டை நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்
#lockdownஇந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.Sumaiya Shafi
More Recipes
கமெண்ட்