திருவாதிரை பாசிப்பருப்பு துவரம்பருப்பு கூட்டு (Pasiparuppu, thuvaram paruppu koottu recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

திருவாதிரை பாசிப்பருப்பு துவரம்பருப்பு கூட்டு (Pasiparuppu, thuvaram paruppu koottu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. பரங்கிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, அவரை, வெள்ளரிக்காய், காராமணி கேரட், கத்திரிக்காய், சௌசௌ, கொத்தவரங்காய், தலா ஒரு கைப்பிடி அளவு
  2. 3 டம்ளர்தண்ணீர்
  3. குழம்பு மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  4. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. 2 டீஸ்பூன்தேங்காய் துருவல்
  7. மிளகு கால் டீஸ்பூன்
  8. சீரகம் கால் டீஸ்பூன்
  9. கடுகு சீரகம் தலா கால் டீஸ்பூன்
  10. 1 டீஸ்பூன்கடலை எண்ணெய்
  11. 2 டீஸ்பூன்பாசிப்பருப்பு
  12. 2 டீஸ்பூன்துவரம்பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அனைத்து காய்கறிகளையும் ஒரேவிதமாக வெட்டி கொள்ள வேண்டும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பின்னர் காய்கறிகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  3. 3

    துவரம் பருப்பு பாசிப்பருப்பு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேக விட்டு அதனை வேகவைத்த காய்கறிகளில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  4. 4

    பின்னர் அதில் தேங்காய் துருவல் மிளகு சீரகம் சேர்த்து நன்கு அரைத்து அதனை காயுடன் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்

  5. 5

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் தாளித்து கூட்டில் சேர்க்க வேண்டும்

  6. 6

    சுவையான சத்தான திருவாதிரை கூட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes

More Recipes