சைதாப்பேட்டை வடகறி

#vattaram
சென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.
சைதாப்பேட்டை வடகறி
#vattaram
சென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
100 கிராம் கடலைப்பருப்பை நன்கு கழுவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் நன்கு வடியவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு 1/2 ஸ்பூன் சோம்பு,1 ஸ்பூன் மிளகாய்த்தூள்,1/4 ஸ்பூன் உப்பு போட்டு தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- 4
அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அரைத்து வைத்த கடலைப்பருப்பு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- 5
பொரித்த வடைகளை கைகளால் சிறிது சிறிதாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.ஒரு மிக்ஸி ஜாரில் 5 ஸ்பூன் தேங்காய் துருவலை போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நைஸாக அரைக்கவும்.
- 6
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை,கிராம்பு, ஏலக்காய், கடுகு, சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- 7
வெங்காயம் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.பிறகு 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 8
பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், 1/4 ஸ்பூன் உப்பு போட்டு 1 நிமிடம் வதக்கவும். பிறகு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 9
கொதி வந்தவுடன் எண்ணெயில் பொரித்து வைத்திருக்கும் வடைகளை அதில் போட்டு 1 நிமிடம் கிளறவும்.பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை அதில் ஊற்றி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- 10
கிரேவி பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
- 11
சுவையான சைதாப்பேட்டை வடகறி தயார். இதை இட்லி, தோசை, பூரி,சப்பாத்தி இவற்றிற்கு சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சென்னை வடகறி(Chennai vada curry recipe in tamil)
#vadacurry சென்னையில் பிரபலமான ஒரு உணவு வடகறி. செய்து பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் என்னுடைய முறையில் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
#Vattaram.#Week-1.#இடியாப்பம் & "சென்னை வடகறி" Jenees Arshad -
-
-
-
-
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry#... சென்னையின் பிரபலமான ஒரு டிஷ் வடகறி.. .. பலவிதமாக செய்வார்கள்.. என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
முருங்கைக்காய் கூட்டு
#ga4 முருங்கக்காய் எல்லா வயதினருக்கும் ஏற்றது நல்ல மருத்துவ குணம் கொண்டது ஆனால் அது சிலரால் கேலிக்குரிய காயாக ஆகிவிட்டது ஆனால் அதிகமாக கிடைக்கும் போது எடுத்து வைத்துக்கொண்டு பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் முருங்கக்காய் மட்டுமல்ல விதையும் நல்ல பலன் கொடுக்கக் கூடியது வீட்டில் வயதானவர்கள் சர்க்கரை வியாதிக்காரர்கள் இருந்தால் அந்த விதையை பொடி செய்து செய்து கொடுக்கலாம் அதிகமாக முருங்கக்காய் கிடைக்கும்போது சுத்தம் செய்து சின்ன சின்னதாக கட் பண்ணி கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் கிடைக்காதபோது இதை சாம்பாரில் கலக்க வாசமாக இருக்கும் Chitra Kumar -
-
😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)
#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும், Riswana Fazith -
சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)
#vadacurryஇந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
வடகறி (vada curry recipe in Tamil)
#vattaramஇந்த வட்டார சமையல் பயணத்தில் என் முதல் பதிவு . சைதாப்பேட்டை வடகறி parvathi b
More Recipes
கமெண்ட்