செஸ்வான் ப்ரைட் ரைஸ்(Szechuan fried rice with home made szechuan sauce recipe in tamil)

Guru Kalai
Guru Kalai @cook_24931712

செஸ்வான் ப்ரைட் ரைஸ்(Szechuan fried rice with home made szechuan sauce recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25minits
3 பரிமாறுவது
  1. அரை கப்முட்டைக்கோஸ்
  2. கால் கப்நறுக்கிய வெங்காயம்
  3. அரை கப்கேரட் பீன்ஸ்
  4. 2 டேபிள் ஸ்பூன் ,பூண்டு
  5. 2முட்டை
  6. ஒரு கப்வேகவைத்த சாதம்
  7. அரை டேபிள் ஸ்பூன்மிளகுத்தூள்
  8. ஒரு டேபிள்ஸ்பூன்,எலுமிச்சை சாறு
  9. சாஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்
  10. 5வர மிளகாய்
  11. 2தக்காளி
  12. அரை டீஸ்பூன், உப்பு
  13. அரை டீஸ்பூன், சர்க்கரை
  14. சிறிதளவுபூண்டு

சமையல் குறிப்புகள்

25minits
  1. 1

    முதலில் சாஸ் செய்வதற்கு வர மிளகாய் தக்காளி எடுத்துக் கொள்ளவும் அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைத்து அதில் சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    வேகவைத்த தக்காளி மிளகாய் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு டீஸ்பூன் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும் பூண்டு வதங்கிய பின் அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    விழுது நன்றாக வதங்கிய பின் அரை டீஸ்பூன் உப்பு அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும் இப்பொழுது சாஸ் தயார்

  5. 5

    அடுத்து ரைஸ் செய்வதற்கு வெங்காயம் பூண்டு முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் எல்லா காய்கறியும் கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்

  6. 6

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து பூண்டு வெங்காயம் முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும் நன்றாக வதங்கிய பின் கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்

  7. 7

    இரண்டு நிமிடங்கள் வதங்கிய பிறகு செய்து வைத்த சாஸ் சேர்த்து வதக்கவும் பிறகு அதில் இரண்டு முட்டை சேர்த்து கிளறவும்

  8. 8

    பிறகு வேக வைத்த சாதம் சேர்த்து நன்றாக கிளறவும் அரை டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும் பிறகு மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கினாள்

  9. 9

    செஸ்வான் ப்ரைடு ரைஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Top Search in

Similar Recipes