சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/4 கி சுரைக்காய்
  2. 1கப் சீனி
  3. 2 ஸ்பூன் நெய்
  4. 2ஏலக்காய்
  5. 10 முந்திரி, பாதாம்
  6. 800 மி.லி பால் தண்ணீர் ஊற்றாத பசும் பால்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    தண்ணீர்ச் சேர்க்காத பசும்பால் எடுத்துக் கொள்ளவும் ஏலக்காயை தட்டி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    சுரைக்காயை தோலுரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும் உள்ளே உள்ள கொட்டைகளை நீக்கிக் கொள்ளவும்

  3. 3

    பின் துருவிக் கொள்ளவும் துருவிய சுரைக்காயை தண்ணீர் வடியும் வரை இறுத்துக் கொள்ளவும்

  4. 4

    ஒருக் கடாயில் நெய் ஊற்றி பாதாம்,முந்திரி,கிஸ்மிஸ்ச் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பின் வதங்கவும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும் அதே நெய்யில் சுரைக்காயை போட்டு வதக்கவும் பின் பாலைக் கொதிக்க விடவும்

  6. 6

    அதில் ஏலக்காயை சேர்த்துக் கொள்ளவும் பின் சீனியைச் சேர்த்து கலக்கி விட்டுக் கொள்ளவும்

  7. 7

    சுரைக்காய் நெய்யில் வெந்ததும் கொதிக்கும் பாலில்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் 5 நிமி்டம் கொதிக்க விடவும்

  8. 8

    கொதித்தப்பிறகு முந்திரி,பாதாமைச் சேர்த்துக் கொள்ளவும் சுவையான சுரைக்காய் பாயாசம் தயார் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes