செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadacurry recipe in tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#vadacurry
இட்லி தோசை பூரிக்கு சூப்பரான சைடிஷ்

செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadacurry recipe in tamil)

#vadacurry
இட்லி தோசை பூரிக்கு சூப்பரான சைடிஷ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் கடலைப்பருப்பு
  2. 3பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
  3. 2தக்காளி (பொடியாக நறுக்கியது)
  4. 4 பச்சை மிளகாய்
  5. நான்கு காய்ந்த மிளகாய்
  6. 20பல் பூண்டு (தோல் உரித்து பொடியாக நறுக்கியது)
  7. ரெண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1 ஸ்பூன் சோம்பு
  9. 2பட்டை
  10. 2ஏலக்காய்
  11. 4 கிராம்பு
  12. 1அண்ணாச்சி பூ
  13. 1பிரியாணி இலை
  14. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  15. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  16. ஒரு ஸ்பூன் மல்லித் தூள்
  17. 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  18. கொஞ்சம்கொத்தமல்லி இலை
  19. ஒரு கொத்து கறிவேப்பிலை
  20. தேவையானஅளவு உப்பு
  21. தேவையானஅளவு தண்ணீர்
  22. 250 மில்லி கடலெண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மிக்ஸி ஜாரில் போட்டு சோம்பு காய்ந்த மிளகாய் ஒரு சிறிய துண்டு பட்டை தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்

  2. 2

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி காயவைத்து அரைத்த கடலைப் பருப்பு விழுதை சிறுசிறு பக்கோடா போன்று போட்டு வேகவிட்டு மட்டும் எடுக்கவும் (வடை போல சிவக்க வறுக்க கூடாது) ஆறவிட்டு வடைகளை ஒன்று நன்றாக உதிர்த்து விடவும்

  3. 3

    அடுப்பில் கடாயை வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு அண்ணாச்சி பூ ஏலக்காய் பிரியாணி இலை கருவேப்பிலை தாளித்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும் பிறகு பச்சை மிளகாய் இரண்டாக வகுத்து பூண்டு சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு தக்காளியை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா தூள் தேவையான உப்பு சேர்த்து வதக்கி கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்

  5. 5

    உதிர்த்து வைத்துள்ள வடை துண்டுகளை போட்டு மூடி வைக்கவும் 5 நிமிடம் பிறகு பார்த்தால் தண்ணீரை வடைகள் உறிஞ்சி கெட்டியாக வந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் சுவையான செட்டிநாடு வடைகறி ரெடி

  6. 6

    இட்லி தோசை பூரிக்கு மிகவும் உகந்த சைடிஷ் எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமானது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes