முருங்கைக்காய் சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பருப்பை நன்கு அலசி சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 70 கிராம் சின்ன வெங்காயத்தை ஒன்று இரண்டாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும். அதனுடன் பூண்டை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2
அதன் பிறகு பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் 1/2 குழிகரண்டி எண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- 3
பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி நான்கு முதல் ஐந்து விசில் வைத்துக்கொள்ள வேண்டும்.
- 4
அதன் பிறகு ஒரு வாணலியில் ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடாக்கிய பின் கடுகு, கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 5
பிறகு 80 கிராம் சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் முருங்கைக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 6
பிறகு தக்காளியை மிக்ஸியில் நன்கு அரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 7
காய் பாதி வெந்தவுடன் பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். சாம்பார் நுரை பொங்கி காய் நன்கு வெந்தபிறகு சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
- 8
சாம்பார் பொடி ஏதுமில்லாமல் ஒரு வித்தியாசமான முருங்கைக்காய் சாம்பார் ருசிக்க தயார். இட்லி, தோசை, பொங்கல் மற்றும் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நெய் முருங்கைக்காய் சாம்பார்
#GA4 week25 #drumstick இந்த சாம்பாரை இட்லி தோசை பொங்கல் போன்ற டிஃபன் வகைகள் உடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும். Manickavalli M -
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்