டீ கடை ஹோட்டல்  பூரி கிழங்கு (kilangu recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#combo1 டீக்கடை ஹோட்டலில் செய்யும் பூரிக்கு இந்த செய்முறையில் கிழங்கு செய்தால்தான் மிகப் பொருத்தமாக, ருசியாக இருக்கும். தக்காளி சேர்க்காமல் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்து விடவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 3பெரிய உருளைக்கிழங்கு
  2. 1பெரிய வெங்காயம்
  3. 4பச்சை மிளகாய்
  4. 1\4ஸ்பூன்தலா கடுகு, உளுந்து
  5. 1\4ஸ்பூன் சீரகம்
  6. 1\2ஸ்பூன் கடலை பருப்பு
  7. 1\4ஸ்பூன் பெருங்காயத் தூள்
  8. 3கொத்து கறிவேப்பிலை
  9. 2டேபிள்ஸ்பூன் கடலை மாவு
  10. 1\4ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1\2மூடி எலுமிச்சை பழம்
  12. 3டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  13. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை நன்கு கழுவி குக்கரில் தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு இறக்கி ஆற விட்டு தோலுரித்து, முள் கரண்டியை வைத்து நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    இதனுடன் கடலை மாவு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய ஒருசேர பிசைந்து தனியே வைக்கவும்

  3. 3

    ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து கடலைப்பருப்பை சேர்த்து சிறிது வறுக்கவும்

  4. 4

    பிறகு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பொரித்து விடவும்

  5. 5

    பிறகு நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கி விட்டு நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயத்தையும் சேர்த்து அடுப்பை குறைந்த தணலில் வைத்து முக்கால் பதம் அளவுக்கு மட்டுமே வதக்கவும்

  6. 6

    இப்போது இதனுடன் உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து குறைந்த தணலில் வைத்து, ஒரு நிமிடம் வரை பச்சை வாடை போக வதக்கி விடவும். பிறகு அரை கப் அளவு தண்ணீர் விட்டு கொதி வர விடவும்

  7. 7

    ஒரு கொதி வரும் பட்சத்தில் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை குறைத்து வைத்து கெட்டி பதம் (semi solid) ஆக வந்ததும், விதையை நீக்கிவிட்டு எலுமிச்சைச் சாறை சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes