மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540

#combo 1இட்லி சாம்பார் செய்ய முதலில் குக்கரில் சுத்தம் செய்த. பருப்பு சின்னவெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்து கடைந்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து சீரகம் பெருங்காயம் வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து கரைத்த புளிகரைசல் குழம்பு மிளகாய்தூள் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சை வாசனை போனவுடன் வேக வைத்து கடைந்த பருப்பை ஊற்றி மஞசள்தூள் உப்பு போட்டு கொதிக்க வைத்து மல்லி இழை தூவி இட்லி சாம்பார் மணக்க சூப்பர் தேவைபட்டால் வெல்லம் சிறிது சேர்க்கலாம்சாம்பார் சுவையோடு இருக்கும் போது இட்லி சாப்பிட தூண்டும் நமக்கு நன்றி 🙏

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

இருபது நிமிடம்
மூன்று பேர்
  1. துவரம் பருப்பு 100கிராம்
  2. பூண்டுபற்கள் ஆறு
  3. சின்னவெங்காயம் ஆறு. தக்காளி ஒன்று பெரிது நெல்லிக்காய் அளவு புளி
  4. தாளிக்க
  5. ஆயில் இரண்டு ஸ்பூன் கடுகு 1\4ஸ்பூன் உழுந்து 1\4ஸ்பூன் சீரகம் 1\4ஸ்பூன் பெருங்காயதூள் சிறிது சின்னவெங்காயம் பத்து கறிவேப்பிலை சிறிது வரமிளகாய் ஒன்று
  6. தேவையானஉப்பு தண்ணீர். மல்லி இழைகள்
  7. குழம்பு மிளகாய்தூள் இரண்டு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

இருபது நிமிடம்
  1. 1

    முதலில் கழுவி சுத்தம் செய்த துவரம் பருப்பு குக்கரில் சேர்த்து அதோடு சின்ன வெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி

  2. 2

    குக்கரை மூடி அடுப்பில் வைத்து மூன்று விசில் விட்டு இறக்கவும் இறக்கி பருப்பை மசித்து கடாயில் ஆயில் ஊற்றி

  3. 3

    சூடானதும் கடுகு உழுந்து சீரகம் தாளித்து பொரிந்தவுடன் பெருங்காயதூள் சேர்த்து

  4. 4

    சின்ன வெங்காயம் கறிவேப்பிலை. வரமிளகாய் சேர்த்து வதக்கி புளி கரைசல் குழம்பு மிளகாய்தூள் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சைவாசனை போனவுடன்

  5. 5

    கடைந்த பருப்பை அதில் ஊற்றி தேவையானஉப்பு மஞசள் தூள்சிறிது சேர்த்து கொதிக்க வைத்து மல்லி இழை தூவி மணக்கும் சாம்பார் சூப்பர்

  6. 6

    நன்றி 🙏🙏🙏வாழ்க வளமுடன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
அன்று

Similar Recipes