(ஒன் பாட்) இட்லி சாம்பார் (Idli Sambar Recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#combo1 ஈர்க்கும் சுவையோடு அட்டகாசமான சுவையில் சாம்பார் அமைந்துவிட்டால் போதும்... இட்லியோ, பொங்கலோ, வடையோ வழக்கமாகச் சாப்பிடுவதைவிட ஒன்றிரண்டு கூடுதலாக உள்ளே இறங்கும்.

(ஒன் பாட்) இட்லி சாம்பார் (Idli Sambar Recipe in tamil)

#combo1 ஈர்க்கும் சுவையோடு அட்டகாசமான சுவையில் சாம்பார் அமைந்துவிட்டால் போதும்... இட்லியோ, பொங்கலோ, வடையோ வழக்கமாகச் சாப்பிடுவதைவிட ஒன்றிரண்டு கூடுதலாக உள்ளே இறங்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 நபர்கள்
  1. 1/2 கப் - பாசி பருப்பு
  2. 1/4 கப் - து.பருப்பு
  3. 2 - வெங்காயம்
  4. 2 - தக்காளி
  5. 2- கேரட்
  6. 3- கத்திரிக்காய்
  7. சிறிதளவு- புளி
  8. 2 மேஜைக்கரண்டி - சாம்பார் பவுடர்
  9. 1/4 தே.க - மஞ்சள் தூள்
  10. சிறிதளவு- பெருங்காய தூள்
  11. தாளிக்க
  12. 1/4 தே.க - கடுகு,உளுந்து
  13. 5- காய்ந்த மிளகாய்
  14. சிறிதளவு- கறிவேப்பிலை
  15. 1/4 தே.க - சீரகம்
  16. 5 பல் - பூண்டு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, வெங்காயம் தக்காளி, சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு அதில் நறுக்கிய கேரட், கத்திரிக்காய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    இறுதியில் இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, சாம்பார் பவுடர், சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வைத்து வேக வைக்கவும்.

  4. 4

    குக்கரில் ஆவி அடங்கியதும் கரண்டி வைத்து சிறிதளவு மசித்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

  5. 5

    கரைத்து வைத்த புளித்தண்ணீர் ஊற்றி, பிறகு அதில் உப்பின் அளவை சரிபார்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்துக் கொள்ளவும். (தேவைப்பட்டால் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும் கூடுதல் சுவையாக இருக்கும்)

  6. 6

    கடைசியாக மல்லித்தழை தூவி பரிமாறவும்.

  7. 7

    கமகமக்கும் ஒன் பாட் இட்லி சாம்பார் சுவைக்க தயார்..🍛🍲🍲🍛🍛🍲🍛🍲🍛

  8. 8

    சுட சுட இட்லியுடன் பரிமாற அட்டகாசமான சுவையில் இருக்கும்.

  9. 9

    🍲🍛🍲🍲🍛🍛🍛

லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes