தலைப்பு-அம்மாவின் பிரண்டை துவையல்

Rani Subramanian
Rani Subramanian @1411rani

நான் சிவகாசியில் இருக்கிறேன்.அங்கிருந்து திருநெல்வேலி வந்தபோது பிரண்டை வாங்கிக்கொண்டுவந்தேன்.அம்மா அப்பாவிற்கு பிரண்டை துவையல் மிகவும் பிடிக்கும். அம்மா தேவையான பொருட்கள் எடுத்துக்கொடுக்கச் சொல்லி அவர்கள் சொன்ன முறைப்படி செய்தேன். இது குக் பேட்டில் என்னுடைய முதல் செய்முறை விளக்கம்

#everyday1

தலைப்பு-அம்மாவின் பிரண்டை துவையல்

நான் சிவகாசியில் இருக்கிறேன்.அங்கிருந்து திருநெல்வேலி வந்தபோது பிரண்டை வாங்கிக்கொண்டுவந்தேன்.அம்மா அப்பாவிற்கு பிரண்டை துவையல் மிகவும் பிடிக்கும். அம்மா தேவையான பொருட்கள் எடுத்துக்கொடுக்கச் சொல்லி அவர்கள் சொன்ன முறைப்படி செய்தேன். இது குக் பேட்டில் என்னுடைய முதல் செய்முறை விளக்கம்

#everyday1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1.30 மணி நேரம்
20 பேர்
  1. - 2 கட்டுபிரண்டை ,
  2. 3 டேபிள்ஸ்பூன்,உளுந்தம்பருப்பு-
  3. 8,மிளகாய்வற்றல் -
  4. சிறிய எலுமிச்சை அளவு, புளி
  5. 2 ஸ்பூன்உப்பு -
  6. 10 பல்வெள்ளைபூண்டு -
  7. 4 குழிகரண்டி, நல்லெண்ணெய் -

சமையல் குறிப்புகள்

1.30 மணி நேரம்
  1. 1

    பிரண்டையை சுத்தம் செய்து பொடியாக வெட்டி இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய்யில் நிறம் மாறும்வரை நன்றாக வதக்கவும். ஆறவிடவும். இன்னொரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் உளுந்தம்பருப்பு வற்றல், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். ஆறவிடவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி வைக்கவும்.

  2. 2

    பிரண்டை மற்றும் வதக்கிய பொருட்கள் உப்பு ஆகியவற்றை புளி தண்ணீர் ஊற்றி மிக்சியில் நன்றாக விழுதாக்கவும். ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் 3 குழிகரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து கலவை கெட்டியாக ஆகும் வரை கொதிக்கவிடவும். தேவைப்பட்டால் நல்லெண்ணெய் மேலும் சேர்கலாம். எண்ணெய் பிரிந்து மேலே வந்து கலவை கெட்டியான பிறகு அடுப்பை ஆப் செய்யவும். தோசை இட்லி,தயிர் சாதம் என்று எவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.. நம் உடலுக்கு மிகவும் சிறந்தது. பசியைத் துண்டும்.

  3. 3

    ஜீரண சக்திக்கு உதவும்.பிரண்டையின் பலன்கள் பலபல...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rani Subramanian
அன்று

Similar Recipes