அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

தோன்றிய இடம் : ஐக்கிய அரபு எமிரேட்ஸ்#combo 3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பாஸ்மதி அரிசி 3 டம்ளர்
  2. தனியா விதை ஒரு டீஸ்பூன்
  3. சீரகம் ஒரு டீஸ்பூன்
  4. பூண்டு 8 பல்
  5. பிரிஞ்சி இலை இரண்டு பட்டை 1 கிராம்பு 4 ஏலக்காய் 3
  6. முந்திரி-10
  7. நெய் ரெண்டு டேபிள்ஸ்பூன்
  8. தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள்ஸ்பூன்
  9. கேரட் ஒன்று
  10. 1மேகி வித் ஸ்டாக்
  11. எலுமிச்சை பழ சாறு அரை டீஸ்பூன்
  12. தேவைப்பட்டால் குங்குமப்பூ கால் பீன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்

  2. 2

    குக்கரில் நெய் சேர்க்கவும் சூடேறியதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் தனியா விதை முதலியவற்றை சேர்த்து சேர்த்து நன்கு வதக்கவும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள கேரட்டையும் சேர்த்து மேகி வெஜ் ஸ்டாக். மசாலாவை சேர்க்கவும்.

  3. 3

    அதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை நன்கு வடிகட்டி மசாலாவில் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் வீதம் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கவும்.

  4. 4

    சுவையான வெஜ் மந்தி தயார் இதனுடன் கலந்து சாப்பிடுவதற்கு வெங்காயம்1 தக்காளி1, வரமிளகாய் 2,மற்றும் ஒரு பல் பூண்டு சிறிதளவு உப்பு சேர்த்து பச்சையாக அரைத்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் இதனுடன் சாப்பிடுவதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes