தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2கிலோ சிக்கன்
  2. 1/2கப் சின்ன வெங்காயம்
  3. 1பெரிய வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 2பச்சை மிளகாய்
  6. 3பல் பூண்டு
  7. ஒரு கொத்து கறிவேப்பிலை
  8. சிறிதளவுகொத்தமல்லி
  9. தேவையான அளவு உப்பு
  10. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  11. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  13. 2ஸ்பூன் மல்லி தூள்
  14. 1ஸ்பூன் சீரகத்தூள்
  15. 2ஸ்பூன் தயிர்
  16. 1/2கப் தேங்காய் துருவல்
  17. 1ஸ்பூன் சோம்பு
  18. 1ஸ்பூன் கசகசா
  19. 1பட்டை
  20. 3கிராம்பு
  21. 1/2ஸ்பூன் மிளகு
  22. 1ஏலக்காய்
  23. கல்பாசி
  24. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, மிளகு, ஏலக்காய், கல்பாசி சேர்த்து தாளித்து பூண்டு பல் சிறிதாக நறுக்கி சேர்த்து வெங்காயம் சிறிதாக நறுக்கியது பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பிறகு இதில் மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும். சிக்கனை கழுவி சுத்தம் செய்து தயிர், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்ததை இதில் சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    மிக்ஸியில் தேங்காய் துருவல், சோம்பு, கசகசா தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து எடுத்து இந்த சிக்கனில் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு காரம் சரிபார்த்து கொள்ளவும்.

  5. 5

    குக்கரை மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.விசில் போனதும் கொத்தமல்லி தூவி கொள்ளவும். சூப்பரான இடியாப்பாத்திற்கேற்ற சிக்கன் பாயா தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes