தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 2 கப் சாதம்
  2. 1/2 பெரிய மாங்காய் துருவியது
  3. ஒரு ஸ்பூன் கடுகு
  4. ஒரு ஸ்பூன் உளுந்து
  5. ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு
  6. ரெண்டு ஸ்பூன் வறுக்கப்பட்ட நிலக்கடலை
  7. 2காய்ந்த மிளகாய்
  8. 1 பச்சை மிளகாய்
  9. அரை டீஸ்பூன் துருவிய இஞ்சி
  10. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. மூணு ஸ்பூன் நல்லெண்ணெய்
  12. கால் ஸ்பூன் பெருங்காயத்தூள்
  13. 1 கொத்து கருவேப்பிலை
  14. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    சாதத்தை உதிரியாக வடித்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு கலந்து வைக்கவும்

  2. 2

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி கடுகு உளுந்து கடலைப்பருப்பு சிவக்க வறுத்து நிலக்கடலை தோலுரித்து அதையும் சேர்த்து வருத்து கருவேப்பிலை பெருங்காயத்தூள் அதனுடன் சேர்த்து காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் துருவிய இஞ்சி போட்டு வதக்கி விடவும்

  3. 3

    பிறகு சாதத்தை போட்டு லேசாக கிளறி விட்டு மாங்காய் துருவலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும் மாங்காய் துருவலையும் சாதத்தையும் நன்றாக கிளறி விடவும் உப்பு தேவைப்பட்டால் போட்டு கிளறவும் பச்சை கருவேப்பிலை தூவி விடவும் பச்சை மாங்காய் சாதம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes