தட்டுவடை செட்

#வட்டாரம் week6 சேலத்தில் மிகவும் பிரபலமான தட்டுவடை செட்
சமையல் குறிப்புகள்
- 1
மினி தட்டு வடை எடுத்து வைக்கவும்.கேரட் பீட்ரூட் துருவி வைக்கவும். வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும் தேங்காய் துருவி வைக்கவும் கொத்தமல்லி தழை கழுவி பொடியாக அரிந்து வைக்கவும்.
- 2
ஒரு வெங்காயம் ஒரு தக்காளி, ஐந்து வரமிளகாய், இரண்டு பல் பூண்டு, சிறிது புளி உப்பு சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து சூடான வாணலில் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும் காரச் சட்னி தயார்.
- 3
மல்லித் தழை ஒரு கைப்பிடி,புதினா தழை ஒரு கைப்பிடி,சிறிதளவு தேங்காய் 5 பச்சை மிளகாய்,உப்பு சிறிது லெமன் ஜூஸ் சேர்த்து அரைத்தால் காரமான புதினா சட்னி தயார்.
- 4
ஒரு தட்டு வடையில் வெங்காய கார சட்னி,தடவவும். துருவிய கேரட் பீட்ரூட் தேங்காய் வெங்காயம் மல்லி இழை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும். இன்னொரு தட்டு வடையில் மல்லி சட்னி தடவி காய்கறி கலவையில் மூடவும். சுவையான தட்டுவடை செட் தயார். நீங்களும் செய்து பாருங்கள்.
Similar Recipes
More Recipes














கமெண்ட்