தக்காளி தோசை

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப் இட்லி அரிசி
  2. 1/2 கப் துவரம் பருப்பு
  3. 4-5 வர மிளகாய்
  4. 1/2 டீஸ்பூன் சீரகம்
  5. 3-4 தக்காளி
  6. தேவையான அளவு எண்ணெய்
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, துவரம் பருப்பை ஒன்றாக சேர்த்து 2 முறை கழுவி இதனுடன் சீரகம், வரமிளகாய் சேர்த்து குறைந்தது 3 மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    மிக்ஸியில் முதலில் ஊறவைத்த அரிசி பருப்பு வர மிளகாய் சீரகத்தை கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும் பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து நீர் தோசைக்கு அரைப்பது போல் அரைத்து கொள்ளவும்

  3. 3

    தோசை சட்டி வைத்து நன்றாக சூடானதும் தோசை போல் வார்க்கவும், பிறகு சுற்றிலும் எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறமும் திருப்பி வேக வைத்து எடுத்து பரிமாறவும்

  4. 4

    சுவையான தக்காளி தோசை தயார் இதனை சட்னி சாம்பாருடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes