எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1 கட்டு மிளகுதக்காளி கீரை
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 5வரமிளகாய்
  4. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  5. 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  6. தேவையானஅளவு உப்பு
  7. 1 ஸ்பூன் எண்ணெய்
  8. 3 ஸ்பூன் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், வரமிளகாயைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

  2. 2

    பிறகு பொடியாக நறுக்கிய கீரையை அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கி பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

  3. 3

    கீரை வெந்து தண்ணீர் சுண்டியவுடன் தேங்காய் துருவலை அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கி பிறகு அடுப்பை நிறுத்தி பரிமாறவும்.

  4. 4

    சுவையான மிளகு தக்காளி கீரை பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes