சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி ஆறு மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
பின்னர் கிரைண்டரில் அரிசி,தேங்காய்,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த மாவை சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை வதக்கவும்.
- 3
பின்னர் இட்லி பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து தண்ணீரை ஊற்றி கொதித்ததும் இட்லி தட்டை வைத்து, அதில் அரைத்த மாவை எடுத்து உருட்டி கொழுக்கட்டைகளாக பிடித்து வைத்து வேக வைக்கவும்.
- 4
அதன்பின் வெந்த கொழுக்கட்டைகளை எடுத்து சேவை பிழியும் சேவை நாழியில் வைத்து பிழியவும்.
- 5
பிழிந்த சேவையை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
- 6
ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு கழுவிய கொத்த மல்லி,பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 7
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு,கடலை பருப்பு,கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 8
பின்பு அரைத்து தயாராக வைத்துள்ள கொத்தமல்லி விழுது சேர்த்து வதக்கவும்.
- 9
விழுது நன்கு வதங்கி பச்சை வாசம் போனதும் தயாராக தட்டில் வைத்துள்ள சேவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 10
ஐந்து நிமிடங்கள் வதக்கினால் நல்ல கலர் கிடைக்கும். கடைசியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும். இப்போது சுவையான கொத்த மல்லி சேவை தயார்.
- 11
தயாரான கொத்தமல்லி சேவையை எடுத்து ஒரு ஹாட் பாக்ஸில் போட்டு வைக்கவும்.
- 12
இப்போது மிகவும் சுவையான,பச்சை வண்ண கொத்தமல்லி சேவை சுவைக்கத்தயார்.
- 13
இந்த சேவை மிகவும் சுவையாகவும்,மிகவும் மிருதுவாகவும் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புதினா, கொத்தமல்லி,தேங்காய் எலுமிச்சை சட்னி
#colours2 ...புதினா கொத்தமல்லியுடன் தேங்காய் பச்ச மிளகாய் எலுமிச்சை சேர்த்து செய்த கிறீன் சட்னி... Nalini Shankar -
-
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
-
-
கொத்தமல்லி சட்னி (Coriander chutney) (Kothamalli chutney recipe in tamil)
#momகொத்தமல்லி இலை, தண்டு, விதை எல்லாம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இந்த கொத்தமல்லி இலை சட்னி மிகவும் சுவையாக இருக்கும். கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்த முதல் மாதத்திலிருந்து இந்த மல்லி இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்பு, பற்கள் உறுதி அடையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட நோய் குறையும். Renukabala -
பருப்பு அரிசி சாதம் (Chenna dal rice recipe in tamil)
பண்டைய காலத்தில் சங்கராந்தி அன்று அதாவது போகிப் பண்டிகை அன்று இரவு இந்த அரிசி பருப்பு சாதம் கண்டிப்பாக செய்வார்கள். கொஞ்சம் எடுத்து ஒரு கப்பில் முதலில் மாற்றி வைப்பார்கள்.பின்னர் தான் அனைவரும் சாப்பிடுவார்கள். காலையில் அந்த சாதத்தை வாங்கி செல்ல வருவோருக்கு கொடுப்பார்கள். இது பண்டைய கிராமங்களில் இருந்த பழக்கம்.#Pongal2022 Renukabala -
-
-
-
சின்ன நெல்லிக்காய் சாதம் (Small Gooseberry rice recipe in tamil)
#Choosetocookசின்ன நெல்லிக்காய் சத்துக்கள் நிறைந்தது. இதில் செய்யும் சாதம் புளிப்பு சுவையுடன் வித்யாசமாக இருக்கும். Renukabala -
-
பருப்பு அரிசி சாதம் (Dal rice recipe in tamil)
சங்கராந்தி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம். பண்டை காலத்தில் போகிப்பண்டிகை இரவு இந்த சாதம் செய்து,முதலில் கொஞ்சம் சாதத்தை எடுத்து சங்கராந்திக்கு வைப்பார்கள். மறுநாள் காலை அந்த சாதத்தை ஊரில் உள்ள ஒருவர் வந்து வாங்கி செல்வார்கள்.#Jp Renukabala -
-
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala
More Recipes
கமெண்ட் (8)