மாங்காய் ஜெல்லி

Shaji's lovely world
Shaji's lovely world @shaji

மாங்காய் ஜெல்லி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 நபர்கள்
  1. 1 மாங்காய்
  2. 100 கிராம் சர்க்கரை
  3. 1/2 டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் மாங்காயை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்

  2. 2

    மாங்காய்த் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்

  3. 3

    அரைத்த விழுதை ஒரு வடிகட்டியில் போட்டு மாங்காய் சாறு மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்

  4. 4

    ஒரு கடாயில் 100 கிராம் சர்க்கரை சேர்த்து அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும் அதில் மாங்காய் சாற்றை சேர்க்கவும்

  5. 5

    அடுப்பை குறைந்த சூட்டில் வைத்து கிளறவும் இதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்

  6. 6

    இந்தக் கலவை நன்றாக கெட்டியானவுடன் சிறிதளவு தண்ணீரில் போட்டு கையில் எடுத்துப் பார்க்க வேண்டும் தண்ணீரில் கரையாமல் வந்தால் சரியான பதம் அப்பொழுது அடுப்பை அணைத்து விடலாம்

  7. 7

    இதை எந்த வடிவத்தில் வேண்டுமோ அதில் ஊற்றி பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைக்க வேண்டும் இரண்டு மணி நேரம் கழித்தால் சுவையான மாங்காய் ஜெல்லி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shaji's lovely world
அன்று

Top Search in

Similar Recipes