ஆனியன், தக்காளி பாத்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#keerskitchen
அரிசி சேவையில் செய்த,"ஆனியன்,தக்காளி பாத்"இது. ஒரே கடாயில் செய்தது.வித்தியாசமானது. சுவையானது.

ஆனியன், தக்காளி பாத்

#keerskitchen
அரிசி சேவையில் செய்த,"ஆனியன்,தக்காளி பாத்"இது. ஒரே கடாயில் செய்தது.வித்தியாசமானது. சுவையானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3/4மணி
6பேர்
  1. 250கிகான்காட் அரிசி சேவை பாக்கெட்
  2. 1/4கப்வெங்காயம்(பொடியாக நறுக்கினது)
  3. 1/4கப்தக்காளி(பொடியாக நறுக்கினது)
  4. 5ப.மிளகாய்(கீறினது)
  5. 1ஆர்க்குகறிவேப்பிலை
  6. 1டீஸ்பூன்கடுகு
  7. 1ஸ்பூன்உ.பருப்பு
  8. 1ஸ்பூன்க.பருப்பு
  9. 1டீஸ்பூன்ம.தூள்
  10. 11/2ஸ்பூன்காஷ்மீரி மிளகாய் தூள்
  11. தேவையான அளவுஉப்பு ருசிக்கு
  12. 3டேபிள்ஸ்பூன்எண்ணெய்
  13. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

3/4மணி
  1. 1

    தண்ணீரில் சிறிது உப்பு,எண்ணெய் ஊற்றி தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் அரிசி சேவையை போட்டு தட்டால் மூடி விடவும்.

  2. 2

    பத்து நிமிடம் ஆனதும் தண்ணீரை வடித்து, வடிதட்டில் போட்டு ரன்னிங் வாட்டரில் கூலாக்கினால் ஒட்டாமல் உதிரியாக வரும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உ.பருப்பு,க.பருப்பு,ப..மிளகாய்,கறிவேப்பிலை தாளித்ததும் வெங்காயத்தை போட்டு சிறிது உப்பு போடவும்.சிறிது வதங்கியதும் தக்காளியை போடவும்.

  4. 4

    தக்காளி வதங்கியதும் ம.தூள்,காஷ்மீரி மிளகாய் தூள் போட்டு நன்கு வதக்கவும். பிறகு வடித்து வைத்த அரிசி சேவையை போடவும்.பிறகு ஒன்றுசேர கிளறவும்.

  5. 5

    நன்கு கிளறினதும்,"ஆனியன்,தக்காளி,பாத்",தயார்.பார்க்க கலர்ஃபுல்லாக இருக்கும்.இதன் ஸ்பெஷல் ஒரே கடாயில்(பாத்திரம்) செய்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes