2 அடுக்கு வைட் பாரஸ்ட் கேக்

#colours3
நான் என் மகளின் பிறந்தநாளுக்காக அவள் விரும்பிய இரண்டடுக்கு வைட் பாரஸ்ட் கேக் தயார் செய்தேன். இது மிகவும் ருசியாக கடைகளில் வாங்குவது போல இருந்தது. லாக்டவுன் சமயத்தில் என்னிடம் இருந்த பொருட்களை வைத்து ஒரு வித்தியாசமான முறையில் இதற்கு அலங்காரம் செய்துள்ளேன்.
2 அடுக்கு வைட் பாரஸ்ட் கேக்
#colours3
நான் என் மகளின் பிறந்தநாளுக்காக அவள் விரும்பிய இரண்டடுக்கு வைட் பாரஸ்ட் கேக் தயார் செய்தேன். இது மிகவும் ருசியாக கடைகளில் வாங்குவது போல இருந்தது. லாக்டவுன் சமயத்தில் என்னிடம் இருந்த பொருட்களை வைத்து ஒரு வித்தியாசமான முறையில் இதற்கு அலங்காரம் செய்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் தயிர், எண்ணெய், வெனிலா எசன்ஸ், சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலந்து கொள்ளவும்.
- 2
இதன் மேல் ஒரு சல்லடை வைத்து அதில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். இதனை கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும். இரண்டு 6 இன்ச் கேக் டின்களை கிரீஸ் செய்து அடிப்பாகத்தில் பட்டர் பேப்பர் வைக்கவும். தயாரித்துள்ள கேக் கலவையை இரண்டு கேக் டின்களில் சமமாக பிரித்து ஊற்றவும்.
- 3
இதனை நன்கு தட்டிவிட்டு, பத்து நிமிடம் பிரீ ஹிட் செய்த ஓவனில் 35 நிமிடங்கள் பேக் செய்யவும். பேக் செய்தபின் கேக்கை அன்மோல்ட் செய்து நன்கு ஆறவிடவும்.
- 4
இதன் மேல் பகுதியில் டூம் போல இருக்கும் பகுதியை வெட்டி எடுக்கவும். மீதமுள்ளதை இரண்டு பாகமாக வெட்டி கொள்ளவும். மற்றொரு கேக்கை ஒரு சிறிய அளவு சில்வர் டப்பாவை கொண்டு வட்டமாக வெட்டி எடுக்கவும். இதனையும் இரண்டாக ஸ்லைஸ் செய்யவும்.
- 5
ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த நான் டைரி விப்பிங் க்ரீம் சேர்த்து பீட் செய்யவும். 2 நிமிடங்கள் கழித்து வெனிலா எசன்ஸை சேர்த்து ஸ்டிப் பீக்ஸ் வரும்வரை விப் செய்யவும்.
- 6
சர்க்கரை மற்றும் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து சர்க்கரை பாகை ஆறவிடவும்.கேக்கின் அடிப்பாகத்தை திருப்பியது போல கீழே வைக்கவும். இதன் மேல் சர்க்கரை பாகை தடவி விடவும். அதன்மேல் விப்பிங் க்ரீம் லேயர் செய்யவும். இதேபோல மேல் பாகத்திலும் செய்யவும். இதே முறையை சிறிய கேக்கிலும் செய்யவும். ஓரங்களிலும் க்ரீம் தடவி கொள்ளவும்.
- 7
இப்பொழுது பெரிய கேக்கின் மீது சிறிய கேக்கை வைக்கவும். இது நகராமல் இருக்க 2 மூங்கில் குச்சிகளை உள்ளே சொருகவும். தயார் செய்த கேக்கை பிரிட்ஜில் வைக்கவும்.
- 8
சாக்லேட் பூ தயாரிக்க, காம்பவுண்ட் சாக்லேட்களை உருக்கி கிண்ணங்களில் எடுத்துக் கொள்ளவும். வயிட் சாக்லெட்டில் கொஞ்சம் டார்க் சாக்லேட்டை ஊற்றி பல் குத்தியினால் மார்பில் எபெக்ட் வரும்படி பரப்பி விடவும். சிறிய மற்றும் பெரிய ஸ்பூன்களை கழுவி சுத்தம் செய்து துடைத்து, இதன் பின்பக்கத்தை சாக்லேட் கலவையில் தொட்டு எடுக்கவும்.
- 9
இவ்வாறு அனைத்து ஸ்பூன்களையும் தயார் செய்து பட்டர் பேப்பர் மீது வைக்கவும். இதை 15 நிமிடங்கள் ப்ரீசரில் வைக்கவும். மீண்டும் இரண்டாவது கோட் செய்து மேலும் 15 நிமிடங்கள் ப்ரீசரில் வைக்கவும்.
- 10
அதன்பின் எடுத்து இரண்டு நிமிடங்கள் கழித்து சாக்லேட் ஐ ஸ்பூனிலிருந்து பொறுமையாக எடுக்கவும். ஒரு சிறிய மூடியின் நடுவில் கொஞ்சம் சாக்லேட் சேர்த்து இதன் மேல் தயாரித்துள்ள பெரிய சைஸ் சாக்லேட் இதழ்களை உருகிய சாக்லேட்டில் தொட்டு பூ போல அடுக்கவும். நடுவில் சிறிய ஸ்பூன் இதழ்களை அடுக்கவும்.
- 11
கடைசியாக மகரந்தத்திற்காக நடுவில் கொஞ்சம் சாக்லெட் சேர்த்து அதன் மேல் சில்வர் பால்ஸ் தூவவும். தயார் செய்த பூவை ஃப்ரிட்ஜில் வைக்கவும். சிறிய இதய மோல்டில் உருகிய சாக்லேட்டை பிரஷ்ஷில் தொட்டு பரப்பி விடவும். இதனை 15 நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து பின் அன்மோல்ட் செய்யவும்.
- 12
கேக்கின் பக்கவாட்டில் 50 கிராம் வைட் சாக்லேட்டை துருவி கைகளால் எடுத்து போட்டி அலங்கரித்துக் கொள்ளவும்.
இப்போது கேக்கின் மேல் தயாரித்துள்ள சாக்லேட் பூவை வைக்கவும். தயாரித்துள்ள இதய சாக்லேட்டுகளை பக்கவாட்டில் அலங்கரித்துக் கொள்ளவும். இதன்மேல் பிரஷ்ஷால் ஜிகினாவை தொட்டு வைக்கவும். ஸ்டார் அச்சை பைப்பிங் பேகில் பொருத்தி கிரீமை சேர்த்து அலங்கரித்துக் கொள்ளவும். - 13
தயார் செய்த கேக்கை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும். மிகவும் ருசியான வைட் பாரஸ்ட் கேக் எல்லாவிதமான விழாக்களுக்கும் பொருத்தமானது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
#npd2 #baking #fruitsருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம். Asma Parveen -
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக். Ilakyarun @homecookie -
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
-
-
-
பேக்கிரி டேரக்கல் கேரமல் போரிங் டி கேக்
இது மிகவும் பொக்கிஷமான வெல்ல பாகுல் ஊற்றி சாப்பிடலாம் இந்த டி கேக்..#AsahiKaseiIndia#COLOURS1 குக்கிங் பையர் -
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)
சிறு முயற்சி....சுவை அதிகம்,செய்முறை எளிதெயெனினும்,மெனக்கெடல் அதிகம். Ananthi @ Crazy Cookie -
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)
#grand1அட்டகாசமான பட்டர் ஸ்காட்ச் கேக் தயாரிக்கும் முறையை மிகவும் எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். Asma Parveen -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
-
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour Sara's Cooking Diary -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
ப்ளூபெரி வால்கேனோகேக்(blueberry volcano cake recipe in tamil)
#made2ப்ளூபெரி கேக் என் இளைய மகனின் முதல் வருட திருமணநாளன்று வாங்கி கொண்டாடினோம். அப்பொழுதிருந்தே நானே செய்ய வேண்டும் என மிகுந்த ஆவல். வால்கேனோஷேப்பில் செய்தேன். அழகாக வந்தது. மகிழ்ச்சியாக இருந்தது மேலும் இது என்னுடைய 💯 வது ரெஷிபி. punitha ravikumar -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
-
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட் (5)