எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 2 வாழைக்காய்
  2. தேவையான அளவு உப்பு
  3. சிறிதுபொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
  4. தேவையான அளவுஎண்ணெய் பொரிப்பதற்கு
  5. மசாலா அரைக்க :
  6. 2 டீஸ்பூன் எண்ணெய்
  7. 10 சின்ன வெங்காயம்
  8. 5 பூண்டு பல்
  9. 1 இன்ச் இஞ்சி
  10. 2 பச்சை மிளகாய்
  11. 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை
  12. 1 டீஸ்பூன் மிளகு
  13. 1 டீஸ்பூன் சீரகம்
  14. 1 டீஸ்பூன் கசகசா
  15. 1 டீஸ்பூன் சோம்பு
  16. 1 பட்டை
  17. 2 லவங்கம்
  18. 1/2 கப் துருவிய தேங்காய்
  19. 5 முந்திரி

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வாழைக்காயை இரண்டாக வெட்டி முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும் பிறகு அதனுடைய தோல் நீக்கி படத்தில் காட்டியவாறு துருவிக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள சேர்த்து மிதமான தீயில் வறுத்து நன்றாக ஆறவிடவும்

  3. 3

    நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து முதலில் இவற்றை அரைத்துக்கொள்ளவும் பிறகு துருவிய வாழைக்காயை சேர்த்து அதையும் இதனுடன் நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    அரைத்த கலவையை பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  5. 5

    கலந்த கலவையில் இருந்து சிறு சிறு உருண்டையாக தேய்த்து 15 நிமிடம் வைக்கவும்

  6. 6

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் வாழைக்காய் உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்

  7. 7

    அட்டகாசமான வாழைக்காய் கோலா உருண்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes