புடலங்காய் பருப்பு உசிலி / SNAKE GOURD USILI reciep in tamil

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#gourd
நான் வித்தியாசமாக புடலங்காயில் பருப்பு உசிலி செய்துள்ளேன்.பருப்பு உசிலிக்கான செய்முறை ஒன்றேதான். ஆனால், நான் காயை மட்டும் மாற்றி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை.

புடலங்காய் பருப்பு உசிலி / SNAKE GOURD USILI reciep in tamil

#gourd
நான் வித்தியாசமாக புடலங்காயில் பருப்பு உசிலி செய்துள்ளேன்.பருப்பு உசிலிக்கான செய்முறை ஒன்றேதான். ஆனால், நான் காயை மட்டும் மாற்றி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3/4மணி
6பேர்
  1. 1 கப்புடலங்காய்(பொடியாக நறுக்கினது)
  2. 4டேபிள்ஸ்பூன்க.பருப்பு
  3. 3டேபிள்ஸ்பூன்து.பருப்பு
  4. 1டேபிள்ஸ்பூன்உ.பருப்பு
  5. 12சி மிளகாய்
  6. 1 டீஸ்பூன்கடுகு
  7. 1 டீஸ்பூன்ம.தூள்
  8. 1ஸ்பூன்காஷ்மீரி மிளகாய்தூள்
  9. 1டீஸ்பூன்பெருங்காயம்
  10. தேவையான அளவுகல் உப்பு ருசிக்கு
  11. 2டேபிள்ஸ்பூன்தே.எண்ணெய்
  12. 2ப.மிளகாய்
  13. 1ஆர்க்குகறிவேப்பிலை
  14. 1டேபிள்ஸ்பூன்கொத்தமல்லி தழை
  15. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

3/4மணி
  1. 1

    க.பருப்பு,து.பருப்பு,உ.பருப்பு,சி.மிளகாயை ஊற வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு ஊறவைத்தை தண்ணீரை வடித்துவிட்டு,கறிவேப்பிலை சேர்த்து, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.கடாயில் தே.எண்ணெய் ஊற்றவும்.

  3. 3

    எண்ணெய் காய்ந்ததும், அரைத்த விழுதை போடவும். பிறகு நன்கு உதிரியாக வதக்கவும்.கடாயில்,தே
    எண்ணெய் காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு,க.பருப்பு தாளிக்கவும்.

  4. 4

    பிறகு கறிவேப்பிலை போடவும்.அதனுடன் நறுக்கின புடலங்காய்,ம.தூள்,காஷ்மீரி மிளகாய்தூள், உப்பு,பெருங்காயம் போட்டு வதக்கவும்.பின்பு மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும்,வதக்கின பருப்பு கலவையை போடவும்.

  5. 5

    ஒன்று சேர கலந்து உதிரியாக வதக்கவும்.பிறகு அடுப்பை அணைத்துவிடவும் மேலே கொத்தமல்லி போடவும்.இப்போது,"புடலங்காய் பருப்பு உசிலி"தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes