#magazine 4 ஆலு பரோட்டா

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

#magazine 4 ஆலு பரோட்டா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
நான்கு பேர்
  1. 200 கிராம்கோதுமை மாவு
  2. 3உருளைக்கிழங்கு
  3. 1வெங்காயம்
  4. ஒன்றுகேரட்
  5. 3பச்சை மிளகாய்
  6. கருவேப்பிலை
  7. மல்லி இலை
  8. இஞ்சி பூண்டு விழுது
  9. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  10. கால் தேக்கரண்டிகரம் மசாலா
  11. ஒரு தேக்கரண்டிகொத்தமல்லித் தூள்
  12. கால் தேக்கரண்டிசீரகத் தூள்
  13. தேவைக்கேற்பஉப்பு
  14. தேவைக் கேற்பவெண்ணெய்
  15. தேவைக்கேற்பஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவை சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    வானவில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது கருவேப்பிலை வெங்காயம் கேரட் துருவல் சேர்த்து வதக்கவும் பின் மசித்து வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து வதக்கவும் இறுதியில் கொத்தமல்லித் தழையை போட்டு ஒரு வதக்கு வதக்கி அடுப்பை நிறுத்தி கொள்ளலாம்

  3. 3

    அந்த உருளைக்கிழங்கு கலவையை நன்கு கலந்து ஒரு உருண்டை சிறு சிறு உருண்டையாக எடுத்து கொண்டு பின் சப்பாத்தி உருண்டையை எடுத்து முதலில் சிறிதாக தட்டி அதனுள் இந்த உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து மூடிக் கொள்ளவும் பின் சப்பாத்தி போல் திரட்டவும்

  4. 4

    தவாவை வைத்து சப்பாத்தியை மிதமான சூட்டில் போட்டு எடுத்துக் கொள்ளவும் ஆலு பராத்தா தயார்

  5. 5

    மிகவும் சுவையாகவும் இருக்கும் ஆலு பரோட்டா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மெதுவாகவும் இருக்கும் ஆலு பராத்தா அதன் மேல் சிரிது வென்னை தடவ மிகவும் ருசியாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sasipriya ragounadin
அன்று

Similar Recipes