கோவக்காய் பொரியல்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

கோவைக்காயை சமையல் செய்து சாப்பிட்டால் புற்று நோய்க்கு மிகவும் நல்லது.நீரிழிவு நோயாளிகள் இதனை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்ளவும்.இதில் வைட்டமின் A, மற்றும் கால்ஷியம் சத்தும் உள்ளது.இதனை அதிகமாக சமையலில் சேர்த்து பயனடையவும்.இதில் போட்டிருக்கும், கறிப்பொடிதான்,*ஹைலைட்*.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. 1/2 கிவட்ட வடிவமாக நறுக்கின கோவைக்காய்
  2. 1டீஸ்பூன்ம.தூள்
  3. 2ஸ்பூன்காஷ்மீரி மி.தூள்
  4. 1 ஸ்பூன்கறிப் பொடி
  5. உப்பு ருசிக்கு
  6. 1ஆர்க்குகறிவேப்பிலை
  7. 1டீஸ்பூன்பெருங்காயத்தூள்
  8. 1டீஸ்பூன்கடுகு
  9. 1ஸ்பூன்க.பருப்பு
  10. 1ஸ்பூன்உ.பருப்பு
  11. 2சி.மிளகாய்
  12. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  13. சிறிதுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கோவைக்காயை சுத்தம் செய்து வட்ட வடிவமாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,கடுகு,க.பருப்பு,உ.பருப்பு, மிளகாய் தாளிக்கவும்.பிறகு கோவைக்காயை போட்டு,அதனுடன் ம.தூள்,காஷ்மீரி மி.தூள்,உப்பு போடவும்.

  3. 3

    பின் நன்கு கலந்து வேக விடவும்.சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக வைக்கவும்.மூடியை எடுத்து விட்டு,கறிவேப்பிலை,பெருங்காயம் போடவும்.

  4. 4

    நன்கு கலந்து கொள்ளவும்.திரும்பவும் மூடி போட்டு வேக விடவும்.நன்கு வெந்ததும் கடைசியாக கறிப்பொடி போட்டு 5 நிமிடம் வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

  5. 5

    இப்போது மிகவும் சத்தான,* கோவைக்காய் பொரியல்* தயார்.இது சாம்பார், குழம்பு,ரசம்,தயிர் சாதங்களுக்கு தொட்டுக் கொள்ள மிக, ஆப்ட்டாக இருக்கும்.செய்து பார்த்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes