அரிசிக் கஞ்சி சத்துமாவு(ARISI KANJI SATHU MAAVU RECIPE IN TAMIL)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

இது 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தகைளுக்கு கொடுக்கலாம். முதலில் சாப்டிட மாட்டார்கள்.எனவே, அவர்களுடன் சேர்ந்து நாமும் 1 வாரம் சாப்பிட்டால் தினமும் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.

அரிசிக் கஞ்சி சத்துமாவு(ARISI KANJI SATHU MAAVU RECIPE IN TAMIL)

இது 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தகைளுக்கு கொடுக்கலாம். முதலில் சாப்டிட மாட்டார்கள்.எனவே, அவர்களுடன் சேர்ந்து நாமும் 1 வாரம் சாப்பிட்டால் தினமும் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பேர்
  1. 5டம்ளர் புழுங்கல் அரிசி
  2. 1டம்ளர் பொட்டுக்கடலை
  3. 1டம்ளர் பச்சை பயிறு
  4. 1கைப்பிடி முந்திரிப் பருப்பு
  5. 1கைப்பிடி பாதம் பருப்பு
  6. சிறிதளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    அரிசி,பொட்டுக்கடலை, பச்சை பயிறு, முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு இவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    வறுத்தவற்றை ஆறவிட்டு,கடையில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.வீட்டில் அரைத்தால் நைசாக அரைபடாது.

  3. 3

    அரைத்ததை சிறிது நேரம் ஆறவைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

  4. 4

    அதிலிருந்தும் 3 ஸ்பூன் (தேவைக்கேற்ப) மாவு எடுத்து 400ml தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்து கொதிக்க விடவும்.

  5. 5

    நன்றாக கொதித்த பிறகு, தேவையான பதத்தில் சிறிது தண்ணீராக அல்லது கூழ் பதத்திற்கு வரும் வரை கொதிக்க விட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி, இறக்க வேண்டும்.

  6. 6

    அவ்வளவுதான். சத்தான அரிசிக் கஞ்சி ரெடி.

    வாரத்திற்கு நான்கு நாட்களாவது கொடுக்க வேண்டும். மிகவும் சத்தானது.

    காலை(அ)மதியம்(அ) இரவு என எப்பொழுது வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes