வரகரிசி இட்லி,தோசை(varagarisi idli dosai recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#CF1
வரகு ஒரு வரம்.

1.நீரழிவு நோய் உள்ளவர்கள்,வரகரிசி உணவுகள் எடுத்துக்கொண்டால், நீரழிவு நோய் கட்டுக்குள் வரும்.
2.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
3.சிறுநீரகம் செயல்பாடுகளை மேம்படுத்தும்.
4.புரதச்சத்து மிகுந்தது.
5.உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வரகரிசி இட்லி,தோசை(varagarisi idli dosai recipe in tamil)

#CF1
வரகு ஒரு வரம்.

1.நீரழிவு நோய் உள்ளவர்கள்,வரகரிசி உணவுகள் எடுத்துக்கொண்டால், நீரழிவு நோய் கட்டுக்குள் வரும்.
2.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
3.சிறுநீரகம் செயல்பாடுகளை மேம்படுத்தும்.
4.புரதச்சத்து மிகுந்தது.
5.உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பேர்
  1. 1கப் வரகு அரிசி
  2. 1கப் இட்லி அரிசி
  3. 1/2கப் உளுந்து
  4. 1/2ஸ்பூன் வெந்தயம்
  5. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    இட்லி அரிசி மற்றும் வரகு அரிசி சேர்த்து நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    மிக்ஸி அல்லது கிரைண்டரில் முதலில்,உளுந்து வெந்தயம் சேர்த்து,தேவைப்படும்போது தண்ணீர் தெளித்து,நன்றாக அரைத்து,வெண்ணெய் போல் திரண்டு வரும்போது எடுத்து விடலாம்.

  4. 4

    பின்,அரிசி கலவையை சேர்த்து ரவை பக்குவத்திற்கு அரைத்து எடுக்கவும். அரைக்கும் போதே உப்பு சேர்க்கவும்.

  5. 5

    உளுந்து மற்றும் அரிசி அரைத்த கலவையை ஒன்று சேர்த்து, குறைந்தது 7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  6. 6

    மாவு புளித்த பின்,நன்றாக கலக்கி இட்லி தட்டில் ஊற்றவும்.

    ஸ்டவ்வில் இட்லி குக்கர் வைத்து,அதில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு சூடானதும்,இட்லி தட்டை வைத்து மூடி,10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

  7. 7

    இதே மாவில்,தோசை பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசையும் சுடலாம்.

  8. 8

    அவ்வளவுதான். சுவையான,சத்தான வரகு இட்லி,தோசை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes