சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவு, கடலை மாவு, வெண்ணெய், எள்ளு,உப்பு எல்லா பொருட்களையும் எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
இரண்டு மாவுகளையும் சலித்து எடுத்துக்கொள்ளவும்.
- 3
ஒரு அகலமான பாத்திரத்தில் சலித்த மாவுகளை சேர்த்து, அத்துடன் வெண்ணெய், எள்ளு,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 4
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்.
- 5
பின்னர் முள்ளு முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி,பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நிரப்பவும்.
- 6
வாணலியில் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு அச்சில் உள்ள மாவை பிழிந்து ஒரு நிமிடம் வேக விட்டு, இரண்டு முறை கலந்து விடவும். பொன்னிறமாக மாறி எண்ணெய் குமிழ் கொஞ்சம் அடங்கியதும் எடுத்தால் சுவையான பட்டர் முள்ளு முறுக்கு தயார்.
- 7
தயாரான முறுக்கை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.இப்போது மிகவும் சுவையான, மொறு மொறு பட்டர் முள்ளு முறுக்கு சுவைக்கத்தயார்.
- 8
இந்த சுலபமான முறுக்கு செய்து சுவைத்து மகிழவும்.
Similar Recipes
-
பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)
#CF2குக்பேட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎇🎆🎆 Sharmila Suresh -
-
-
-
-
பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
-
-
-
-
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#kids 1# snakes பட்டர் முறுக்கு செய்ய கடலைமாவு பச்சரிசிமாவு எள் சீரகம் உப்பு பட்டர் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி சப்பாத்திமாவு போல் பிசைந்து முருக்கு குழலில் முள்ளுமுருக்கு அச்சில் பிழிந்து கடாயில் ஆயில் ஊற்றி சுட்டு எடுத்தால் குழந்தைகளும் பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் சுவையாகவும் சூப்பராகவும் இருக்கும் Kalavathi Jayabal -
-
முள்ளு முறுக்கு
#lockdown1#bookமத்திய அரசு கொரானா பரவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆகையால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் திண்டாட்டம். நொறுக்குதீனி கடைகள் கால வரையற்று அடைக்கப்பட்டு இருப்பதால் ,நான் வீட்டிலேயே முள்ளு முறுக்கு செய்தேன் .எனக்கும் முறுக்கு செய்ததால் பொழுதுபோக்காக இருந்தது .வீட்டில் இருப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள் . Shyamala Senthil -
உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#தீபாவளி(dipawali) தமிழ்நாட்டில் தீபாவளியன்று பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் முறுக்கு செய்வார்கள் வெண்ணெய் சேர்த்து முறுக்கு செய்தால் வயதானவர்கள் கூட சாப்பிடலாம். Senthamarai Balasubramaniam -
-
-
-
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala -
தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி Kavitha Chandran -
-
புழுங்கல் அரிசி கார முள்ளு முறுக்கு(mullu murukku recipe in tamil)
#DE -முறுக்கு வைகளில் சுவையான கார முறுக்கும் தீபாவளிக்கு செய்வார்கள்.. இது புழுங்கல் அரிசியில் செய்த சுவையான கார முறுக்கு 😋 Nalini Shankar -
கறிவேப்பிலை முறுக்கு (Kariveppilai murukku recipe in tamil)
#kids1கறிவேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டவை..அதை குழந்தைகள் சாப்பிடாமல் தவிர்ப்பார்கள்...இப்படி முறுக்கில் கலந்து செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
பாலக் முறுக்கு (palak murukku recipe in tamil)
#cf2 கீரை என்றாலே குழந்தைகள் முகத்தைச் சுளிப்பார்கள்.. சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் உடனே முறுக்கை காலி பண்ணி விடுவார்கள்.. Muniswari G
More Recipes
கமெண்ட் (3)