* கேரமல் வரகரிசி பாயசம்*(varagarisi payasam recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

தீபாவளி ரெசிப்பீஸ் #CF2
வரகில், புரதம், கால்ஷியம், வைட்டமின் சி அதிகம் உள்ளது.தாதுப் பொருட்களும் அதிகம் உள்ளது.மேலும் விரைவில் செரிமானம் அடைவதுடன், உடலுக்கு தேவையான சத்துக்கள் இதில் உள்ளது.

* கேரமல் வரகரிசி பாயசம்*(varagarisi payasam recipe in tamil)

தீபாவளி ரெசிப்பீஸ் #CF2
வரகில், புரதம், கால்ஷியம், வைட்டமின் சி அதிகம் உள்ளது.தாதுப் பொருட்களும் அதிகம் உள்ளது.மேலும் விரைவில் செரிமானம் அடைவதுடன், உடலுக்கு தேவையான சத்துக்கள் இதில் உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
6 பேர்
  1. 1 கப்வரகரிசி
  2. 3/4 கப்சர்க்கரை
  3. 10முந்திரி
  4. 10திராட்சை
  5. 1 ஸ்பூன்நெய்
  6. 1துளிவெண்ணிலா எஸன்ஸ்
  7. 1/2லிபால்
  8. 31/2கப்தண்ணீர்
  9. அலங்கரிக்க:-
  10. 1 டேபிள் ஸ்பூன்வறுத்த முந்திரி, திராட்சை

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    வரகரிசியை தண்ணீர் விட்டு நன்கு களையவும். குக்கரில் 3 கப் தண்ணீர் விட்டு களைந்த வரகரிசியை போட்டு 3விசில் விட்டு நன்கு வேக விடவும்.

  2. 2

    கடாயில் நெய் விட்டு உருகினதும், உடைத்த முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும்.கடாயில் 1 ஸ்பூன் சர்க்கரையை போட்டு உருகி பிரௌன் நிறம் வரும் வரை கேரமல் ஆனதும் பாலுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து காய்ந்ததும், அடுப்பை சிறியதில் வைத்து, வெந்த வரகரிசியை போட்டு 5 நிமிடம் ஒன்று சேர வெந்ததும் சர்க்கரையை போடவும்.

  3. 3

    சர்க்கரை கரைந்து சிறிது கெட்டியானதும் அடுப்பை நிறுத்தி விட்டு, வறுத்த முந்திரி,திராட்சை, வெண்ணிலா எஸன்ஸ் ஊற்றவும்.

  4. 4

    இப்போது சுடசுட, ஆரோக்கியமான, சுவையான,வித்தியாசமான, * கேரமல் வரகரிசி பாயசம்* தயார்.தீபாவளிக்கு இதனை செய்து பார்த்து அசத்துங்கள்.மேலே வறுத்த முந்திரி, திராட்சையை போட்டு அலங்கரிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes