'குழம்பு கூட்டி' செய்த மீன் குழம்பு(meen kulambu recipe in tamil

*கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இந்த மீனில் உள்ளதால்,உடல் மற்றும் எலும்பு வளர்சிக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.
'குழம்பு கூட்டி' செய்த மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
*கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இந்த மீனில் உள்ளதால்,உடல் மற்றும் எலும்பு வளர்சிக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.
சமையல் குறிப்புகள்
- 1
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.
கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள்.
- 2
மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து மையாக அரைக்கவும்.
இஞ்சி மற்றும் சீரகம் தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
முதலில் குழம்பு கூட்ட வேண்டும்.
அதற்கு,ஒரு மண்சட்டியில்,தேங்காய் அரைத்த விழுது,புளிக்கரைசல், குழம்பு மிளகாய் தூள் மற்றும் குழம்பு எவ்வளவு வேண்டுமோ அதே போல்,இன்னோரு மடங்கு தண்ணீர் சேர்த்து கலந்து நன்றாக கொதிக்க விடவும்.
- 4
குழம்பு ஸ்டவ்வில் வைக்கும் போதே 5 மீன் துண்டுகளை போட்டு கொதிக்க விட்டால்,அவை கரைந்து குழம்பிற்கு நல்ல சுவை கொடுக்கும். விரும்பினால் சேர்க்கலாம்.
குழம்பு கொதித்ததும்,நறுக்கிய தக்காளி,மிளகாய், வெந்தயம் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 5
15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு பின்,மீன் துண்டுகளை சேர்க்க வேண்டும்.
- 6
மீன் நன்றாக வெந்ததும்,குழம்பும் கொதித்து சுண்டி வந்திருக்கும். பின் இடித்து வைத்த பூண்டு சீரகம் சேர்க்க வேண்டும்.உப்பு சரி பார்க்கவும்.
- 7
இப்பொழுது 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.உடனே கறிவேப்பிலை நறுக்கி சேர்க்கவும்.
குழம்பு கூட்டி செய்த இந்த மீன் குழம்பிற்கு தாளித்து கொட்டுவது வழக்கம் இல்லை.
விரும்பினால் தாளித்துக் கொள்ளலாம். - 8
அவ்வளவுதான். சுவையான மீன் குழம்பு ரெடி.
நான் சம்பா அரிசி(சிவப்பரிசி) சாதம் செய்து பரிமாறினேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
மண் சட்டியில் வைத்த திருக்கை மீன் குழம்பு (Thirukkai meen kulambu recipe in tamil)
மருத்துவ குணம் கொண்ட திருக்கை மீன் குழம்பு. உடல் நலத்திற்கு மிகவும் நல்லது , பிள்ளை பெற்ற தாய்மார்கள், கை ,கால் ,உடல் வலி முதுகு வலி, உடையவர்கள் அனைவரும் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
-
-
மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், சோம்பு, பச்சை மிளகாய் போட்டு கொள்ளவும்.வெங்காயம், தக்காளி, பூண்டு, கல் உப்பு சேர்த்து வதக்கவும்.பின் 2 டேபிள் ஸ்பூன் குழம்பு தூள், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும், பிறகு புளி தண்ணீர் ஊற்றி விடவும்.(லெமன் அளவு போதும்).150 மில்லி தண்ணீர் சேர்த்து கொள்ளவும், கொழம்பு நன்றாக kothikka வேண்டும்.பிறகு மீன் சேர்க்கவும், மீன் ஒரு கொதிப்பு வந்த பின் சினை சேர்க்கவும்.அழகம்மை
-
-
'குழம்பு கூட்டி'செய்த பூண்டு குழம்பு / Poondu Kulambu Recipe in
#magazine2இது என் அம்மா சொல்லிக் கொடுத்தது."குழம்பு கூட்டுதல்" என்பது தேங்காய், வெங்காயம், சீரகம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளி கரைசல் மற்றும் மசாலா கலந்து விடுவார்கள். இதற்குதான் 'குழம்பு கூட்டுதல்' என்று பெயர்.கூட்டிய குழம்பபை கொதிக்க வைத்து, கொதித்த பிறகு,அந்தந்த குழம்பு வகைகளுக்கு ஏற்ற மாதிரி காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
ஊளி மீன் தலை மற்றும் வால் குழம்பு (Ooli meen kulambu recipe in tamil)
ஊளி மீனில் மிள் குறைவாக இருக்கும் என்பதால் தலை மற்றும் வால் குழம்பிற்கு பயன்படுத்தலாம். Sarvesh Sakashra -
-
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
-
-
-
-
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤 Tamilmozhiyaal -
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
-
வஞ்சிரம் மீன் குழம்பு (Vanjiram meen kulambu recipe in tamil)
இதில் முள் குறைவு. சுவையோ அதிகம். Kanimozhi M -
கெண்டை மீன் குழம்பு (Jilebi kendai meen kulambu recipe in tamil)
1)இந்தவகை மீனில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.2) இதயத்திற்கு மிகவும் நல்லது இருக்கும்.3) உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும். Nithya Ramesh -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்