ராகி கூழ்(ragi koozh recipe in tamil)

நம் முன்னோர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவு. அக்காலங்களில் அரிசி சாதம் என்பது விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படும் உணவு. செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே அரிசி உணவு அதிகம் செய்வார்கள். விவசாயிகள் கூலி வேலை செய்பவர்கள் ஏழைகள் இவர்களுக்கெல்லாம் அன்றாட உணவு கம்பங்கூழ் கேப்பை கூழ் போன்ற உணவுகள் தான்.தொட்டுக்கொள்ள சிறு வெங்காயம் அல்லது பச்சை மிளகாய் உப்பு கருவாடு போன்றவை தான். அந்த காலமா இந்த காலமா எந்த காலம் என்றாலும் ராகி அதாவது ஆரியம் கம்பு வரகு சாமை திணை போன்றவைதான் மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும் உடலில் எதிர்ப்பு சக்தி பெருகும் உடலில் வலிமை கூடும் உடல் உழைப்பு செய்ய தேவையான அதிக உடல் சக்தி திறன் பெருகும். அந்த காலங்களில் மேற்கூறிய அனைத்து சிறுதானியங்களும் மிக மிக விலை குறைவு. நம்முடைய பாரம்பரிய பற்றி தெரியாதவர்கள் இன்று இதன் அருமையை உணர்ந்ததால் இது விலை அதிகமாகிவிட்டது. எனக்கு புது புது வகையாக செயற்கை பொருட்களை சேர்த்து செய்வதை விட மிகவும் பாரம்பரியமான அம்மா பாட்டி கால உணவுகள் தான் மிகவும் பிடிக்கும். அது மட்டுமல்லாமல் அந்த காலத்தில் விறகு அடுப்பு சீமண்ணை அடுப்பு, குமுட்டி அடுப்பு போன்றவற்றில் சமைக்கும் உணவுகளின் சுவையே தனி. பிரஷர் குக்கர் இல்லை நான் ஸ்டிக் இல்லை எவர்சில்வர் பாத்திரங்கள் இல்லை. அலுமினிய பாத்திரம் மண்சட்டி பித்தளை பாத்திரம் வெண்கல பாத்திரம் செம்பு பாத்திரம் போன்றவைதான் சமையல் செய்ய இருந்தது.பித்தளை செம்பு பாத்திரங்களில் ஈயம் பூசி சமையல் செய்வார்கள். அதன் சுவையே தனி. இந்த சாதாரண கேப்பை களி க்கு பின்னால் எவ்வளவு விஷயங்கள் நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள்.
ராகி கூழ்(ragi koozh recipe in tamil)
நம் முன்னோர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவு. அக்காலங்களில் அரிசி சாதம் என்பது விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படும் உணவு. செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே அரிசி உணவு அதிகம் செய்வார்கள். விவசாயிகள் கூலி வேலை செய்பவர்கள் ஏழைகள் இவர்களுக்கெல்லாம் அன்றாட உணவு கம்பங்கூழ் கேப்பை கூழ் போன்ற உணவுகள் தான்.தொட்டுக்கொள்ள சிறு வெங்காயம் அல்லது பச்சை மிளகாய் உப்பு கருவாடு போன்றவை தான். அந்த காலமா இந்த காலமா எந்த காலம் என்றாலும் ராகி அதாவது ஆரியம் கம்பு வரகு சாமை திணை போன்றவைதான் மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும் உடலில் எதிர்ப்பு சக்தி பெருகும் உடலில் வலிமை கூடும் உடல் உழைப்பு செய்ய தேவையான அதிக உடல் சக்தி திறன் பெருகும். அந்த காலங்களில் மேற்கூறிய அனைத்து சிறுதானியங்களும் மிக மிக விலை குறைவு. நம்முடைய பாரம்பரிய பற்றி தெரியாதவர்கள் இன்று இதன் அருமையை உணர்ந்ததால் இது விலை அதிகமாகிவிட்டது. எனக்கு புது புது வகையாக செயற்கை பொருட்களை சேர்த்து செய்வதை விட மிகவும் பாரம்பரியமான அம்மா பாட்டி கால உணவுகள் தான் மிகவும் பிடிக்கும். அது மட்டுமல்லாமல் அந்த காலத்தில் விறகு அடுப்பு சீமண்ணை அடுப்பு, குமுட்டி அடுப்பு போன்றவற்றில் சமைக்கும் உணவுகளின் சுவையே தனி. பிரஷர் குக்கர் இல்லை நான் ஸ்டிக் இல்லை எவர்சில்வர் பாத்திரங்கள் இல்லை. அலுமினிய பாத்திரம் மண்சட்டி பித்தளை பாத்திரம் வெண்கல பாத்திரம் செம்பு பாத்திரம் போன்றவைதான் சமையல் செய்ய இருந்தது.பித்தளை செம்பு பாத்திரங்களில் ஈயம் பூசி சமையல் செய்வார்கள். அதன் சுவையே தனி. இந்த சாதாரண கேப்பை களி க்கு பின்னால் எவ்வளவு விஷயங்கள் நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
5 கப் தண்ணீரில் ஒரு கப் அளவு ஆரிய மாவு சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி இதை அடுப்பில் சிறிய தீயில் வைத்து ஆரம்பத்தில் ஐந்து நிமிடம் வரை நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். கூழ் கொஞ்சம் கெட்டியாக ஆரம்பித்தவுடன் தட்டு போட்டு மூடி வேக வைக்கவும்
- 2
15 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும். அவ்வப்போது கரண்டி கொண்டு கிளறி விடவும்..நன்கு வேக ஆரம்பித்தவுடன் மாவு வாசனை நன்றாக வரும் மேலும் கையில் தொட்டுப் பார்த்தால் ஒட்டாது. இப்போது அடுப்பை நிறுத்தி விடவும். தங்களுக்கு தேவையான அளவு மோர் அல்லது தயிர் எடுத்து வைத்துக் கொள்ளவும். கூழை தேவையான அளவு ஒரு தனி கப்பில் எடுத்துக்கொண்டு தயிரை ஊற்றி அல்லது மோரை ஊற்றி கலக்கவும். கட்டி இல்லாமல் உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
- 3
பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி அனைத்தையும் கரைத்த உப்பு சேர்த்து கலக்கி விட்டு குடிக்கலாம்.கெட்டியாக களியாகவே வைத்திருந்து அதில் முருங்கைக்கீரை குழம்பு ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். எந்த காலத்திற்கும் ஏற்ற கூழ். சர்க்கரை நோயாளிகள் கரைத்து குடிக்காமல் கெட்டியாக குழம்பு அல்லது தயிர் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம். தனியாக கரைத்துக் குடித்தால் சர்க்கரை அளவு உயரும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேப்பை கூழ் (ராகி கூழ்)(ragi koozh recipe in tamil)
#made1 ராகி கூழ் தேவாமிர்த்தங்க... வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்... வெயில் காலத்துல இத செஞ்சோம்னு வைங்க... அப்படி ஒரு சுவை..... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்....🤤🤤🤤 Tamilmozhiyaal -
-
-
-
-
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
-
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
-
கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil)
#HFகேழ்வரகில் கால்சியம்சத்தும், நார்சத்தும் அதிகளவில் உள்ளது. 100-கிராம் கேழ்வரகில், 344-மில்லிகிராம் கால்சியம் நிறைந்துள்ளது. கேழ்வரகு தோலில் பால்ஃபெனால்சு இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் முதல் இணை உணவு கேழ்வரகுதான். தாய்பாலுக்கு அடுத்தபடியாக அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. Meenakshi Maheswaran -
ராகி பிரியாணி (Ragi biryani recipe in tamil)
ராகி ,கேழ்வரகு ,கேப்பை ,என்று அழைக்கப்படுகிறது. 100 கிராம் ராகி மாவில் 7.3 கிராம் புரதச்சத்தும் 3.6 கிராம் நார்ச்சத்தும் 344 கிராம் கால்சியம் சத்தும் 3.9 கிராம் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. குழந்தைகளுக்கு ராகி உணவு கொடுப்பதனால் பற்களும் எலும்புகளும் உறுதியளிக்கும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கேழ்வரகில் டிரிப்டோபான் எனப்படும் வேதிப்பொருள் உள்ளதால் பசி அதிகரிப்பதை கட்டுப்படுத்தி உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது இது நரம்பை பலப்படுத்தும் சக்தி அதிக அளவில் உள்ளது.(finger millet)#ga4#week20 Sree Devi Govindarajan -
கேப்பை ரொட்டி(ragi roti recipe in tamil)
சிறு தானியங்களில் மிக முக்கியம் வாய்ந்தது கேப்பை. மிக எளிதாக கிடைக்கும் தானிய வகை. இதில் உள்ள சத்துக்கள் ஏராளம். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணும் உணவாக கேப்பை உள்ளது. கேப்பை கொண்டு பல வித உணவுகள் செய்யலாம். அதில் மாலை நேர உணவாக செய்யக் கூடிய கேப்பை ரொட்டி செய்முறை பற்றி பார்க்கலாம். #ku Meena Saravanan -
குறு தானிய க் கூழ்(Kuru thaaniyak koozh recipe in tamil)
குறுதானியம் கம்புசோளம்,வரகு,சாமை,திணை.சமமாக எடுத்து மாவாக திரிக்கவும்திரித்த. அதில் 50கிராம் எடுத்து தண்ணீர் 4பங்கு தண்ணீர் கலந்து உப்பு, சீரகம், சோம்பு ல்லாம் கலந்து ஒரு ஸ்பூன் போட்டு வேகவிடவும். வெங்காயம் மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
-
ஊத்தப்பம் (uthapam recipe in Tamil)
எல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். மீந்த தோசை அல்லது இட்லி மாவில் ரவை கலந்து காய்கறிகள் கூடப் போட்டு பண்னினேன். மீந்த தோசை அல்லது இட்லி மாவு இல்லாவிட்டால் ரெஸிபியில் இருப்பது போல மாவுகளை தண்ணீரில் சேர்த்து ரவை கூட சேர்க்கலாம். ,அரிசி, உளுந்து மாவுகள், ரவை மூன்றொடு, தயிர், காய்கறிகள் வெங்காயம், தக்காளி, அவகேடோ (avacado) பச்சைபட்டாணி, காளான். கேரட், பச்சை மிளகாய் சேர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து மாவு கலவை தயாரித்தேன். (2 அல்லது 3 காய்கறிகள் சேர்த்தாலே போதும். ஸ்ரீதர்க்கு அவகேடோ காளான் பிடிக்காது; ஊத்தப்பம் இஷ்டம்; அதனால் அவைகளை disguise பண்ணி வேறு ஏதாவதோடு சேர்ப்பேன்) இரும்பு வாணலியில் ஊத்தப்பம் செய்தேன். மிதமான நெருப்பில் செய்வதால், செய்யும் போது அடுப்பு பக்கத்திலேயே நிற்க்கத் தேவை இல்லை; வெந்த வாசனை வரும்போது சமையலறைக்கு சென்று திருப்பிப் போடுவேன். இரண்டு பக்கமும் வேகவேண்டும். எளிய முறையில் பண்ணிய சுவையான ஊத்தப்பம், #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
ராகி தோசையுடன் காரசாரமான தக்காளி சட்னி (Raagi Dosa & Thakkali Chutni Recipe in Tamil)
#இரவுஉணவு#myfirstrecipeஇன்றைக்கு நாம் குழந்தைகளுக்கு சத்தான சுவையான ஒரு இரவு உணவை தயார் செய்ய போகிறோம். ராகி மிகவும் சத்தான தானியம். பண்டைய காலங்களில் ராகி கூல், கலி நம் தாத்தா, பாட்டி சாப்பிடுவதை கண்டிருப்போம். அந்த ராகியை வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது எனது முதல் இரவுஉணவு ரெசிபியாகும். Aparna Raja -
Methati Chekkalu (Methati chekkalu recipe in tamil)
#ap அரிசி மாவில் செய்யும் இந்த அப்பச்சி மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்ற மாலை ஸ்நாக்ஸ். BhuviKannan @ BK Vlogs -
#பொரித்த உணவுகள் ராகி பக்கோட (கேழ்வரகு மாவு பக்கோட)
ராகி நம் பாரம்பரிய உணவு பொருட்களில் ஒன்று .நம் உடலுக்கு நன்மை தரும் இந்த ராகியில் நாம் சுவையான செய்து ஆரோக்கியதுடன் வாழ்வோம்.மிகவும் சுலபமான.நொடியில் செய்யும் இந்த ராகி பக்கோடவும் ஒன்று. Akzara's healthy kitchen -
ராகி கூழ்
#மகளிர்மட்டும்cookpadராகி குஹம் என்பது பசையம் இலவசம், நீரிழிவு நட்பு மற்றும் கோடை காலத்தில் குறிப்பாக ஆரோக்கியமான சிற்றுண்டி கஞ்சி.இது ஒரு சரியான உடல் குளிர்ச்சியானது மட்டுமல்ல, இந்த ராகி குஹம் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் உள்ள பல மக்களுக்கு இன்றும் ஒரு பிரதான காலை உணவுதான். SaranyaSenthil -
-
ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
#qk எடை குறைப்புக்கு மிக உதவியாக இருக்கும் ராகியால் செய்யும் இந்த அடை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. Ananthi @ Crazy Cookie -
மோர் களி (Morkali recipe in tamil)
#arusuvai4என் அம்மா செய்யும் பிரமாதமான, சுவையான உணவு இந்த மோர் களி.என் அக்கா அவர்களிடம் செய்முறை கேட்டு முதன் முறையாக செய்கிறேன். நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். புளித்த மோர் மற்றும் அரிசி மாவு கொண்டு செய்ய வேண்டும். Meena Ramesh -
-
ராகி சப்பாத்தி/கேழ்வரகு சப்பாத்தி - 2 செய்முறை
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்#yummyfoodhut Shalini Prabu -
-
தெற்க்கத்தி களி(village style kali recipe in tamil)
#VKகொதிக்கும் கோடைக்காலத்தில் குளிரவைக்கும் தெம்பூட்டும் சத்தான தெற்க்கத்தி களிமதுரையில் பேரசிரியாராக சில வருடம் இருந்தேன், இந்த களி மதுரையில் பாப்புலர். பரவை முனியம்மா எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ரேசிபியை சிறிது மாற்றினேன் தமிழ் நாட்டிலேயே ஆட்டுக்கல், விறகு அடுப்பு மறைந்து விட்டது. அமெரிக்காவில் நான் எங்கே போவேன் அதற்க்காக? வெல்லம் சேர்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, சிறிது சேர்த்தேன் . விரும்புவர்கள் அதிகமாக சேர்க்கலாம் சேர்க்கலாம். Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்