வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)

தயிர் சாதத்தில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் .மேலும் வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணித்து உடலுக்கு வெயிலினால் இழக்கும் சக்தியை பெற்று தரும். உடனடியாக சாப்பிடுவது என்றால் அரை கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும் காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் கால் ஸ்பூன் தயிர் மட்டும் பாலில் சேர்த்து கலந்து சாதம் செய்யவும்.
வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)
தயிர் சாதத்தில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் .மேலும் வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணித்து உடலுக்கு வெயிலினால் இழக்கும் சக்தியை பெற்று தரும். உடனடியாக சாப்பிடுவது என்றால் அரை கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும் காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் கால் ஸ்பூன் தயிர் மட்டும் பாலில் சேர்த்து கலந்து சாதம் செய்யவும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளரிக்காய் தண்ணீரில் கழுவி விட்டு துருவிக் கொள்ளவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து சூடு ஏறியவுடன் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு இஞ்சி பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும். பிறகு சாதத்தை குழைய பிசைந்து கொள்ளவும்.
- 2
2 கப் பால் எடுத்து சேர்த்து ஒரு கப் சாதம் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். நன்கு கிளறி விட்டு அதில் தயிர் அரை கப் சேர்த்துக் கொள்ளவும். உடனடியாக சாப்பிடுவது என்றால் புளிக்காத அரை கப் தயிர் சேர்க்கவும். மதிய உணவிற்கு காலையிலேயே செய்வது என்றால் கால் ஸ்பூன் தயிர் சேர்த்தால் போதும்.நன்கு அனைத்தையும் கலந்து விட்டு கருவேப்பிலை கொத்தமல்லித் தழை சேர்த்து அதனுடன் துருவிய வெள்ளரிக் காயையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மாங்காய் தொக்கு இஞ்சி தொக்கு பொடியாக நறுக்கிய மாங்காய் ஊறுகாய் மற்ற ஊறுகாய் வகைகள் சுவையாக இருக்கும்.அல்லது உருளைக்கிழங்கு கறி மசாலா ப்ரை தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹோட்டல் தயிர் சாதம் (hotel style curd rice)
தயிர் சாதம் நம் தென்னிந்தியர்களின் முக்கியமான உணவாகும். குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால் எல்லா ஹோட்டலிலும் தயிர் சாதம் மெனுவில் உள்ள ஒன்று.#hotel Renukabala -
*மாங்காய், தயிர் சாதம்*(curd rice recipe in tamil)
#queen1 வெயிலுக்கு தயிர் சாதம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சாதத்திற்கு தாளித்து, இஞ்சி, ப.மிளகாய் விழுது, ப.மாங்காய், பெருங்காயம், கறிவேப்பிலை,போட்டு செய்தால் சுவை கூடும். Jegadhambal N -
*தயிர் சாதம்* (அப்பாவிற்கு பிடித்தது)(curd rice recipe in tamil)
#littlechefஎன் அப்பாவிற்கு, தயிர் சாதம் என்றால் மிகவும் பிடிக்கும்.அவரின் நினைவாக, இதனை செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
ஐஸ் பிரியாணி(Hotel style curd rice..ice biriyani recipe in tamil)
#pongal 2022பொங்கல் அன்று செய்த பொங்கு சோறு நீண்டுவிட்டது. இரவில் தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விட்டேன்.மறுநாள் மதியம் சாப்பிடும் பொழுது அந்த சாதத்தை வெளியில் எடுத்து தண்ணீர் குளிர்ந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டேன்.இது தாளிதம் செய்து தயிர்சாதம் செய்தேன் சூப்பராக இருந்தது ஹோட்டல் ஸ்டைல் தயிர் சாதம் போல் இருந்தது. அப்படி என்றால் ஹோட்டலில் தயிர் சாதத்தை இப்படித்தான் மீதமான சாப்பாட்டில் செய்வார்களோ என்னவோ. நான் விளையாட்டாக சொல்வது போல் இதற்கு நான் வைத்த பெயர் ஐஸ் பிரியாணி. வாருங்கள் ஐஸ் பிரியாணி செய்வோம். Meena Ramesh -
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil -
கண் பார்வைக்கு உகந்த நெல்லிக்காய் காரட் வெள்ளரிக்காய் சாதம்(amla carrot and cucumber rice recipe)
#ஆரோக்கியம் நிறைந்த உணவு செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வரிசையில் இன்று கண் பார்வைக்கு மிகவும் நல்ல காய்கறிகளான நெல்லிக்காய் கேரட் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து ஒரு கலவை சாதம் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. வீட்டில் வெள்ளரிக்காய் கேரட் மற்றும் நெல்லிக்காய் இருந்தது.வீட்டில் இருப்பதை கொண்டும் நாம் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து குழந்தைகளுக்கு மற்றும் நமக்கும் பெரியவர்களுக்கும் தயாரிக்கலாம். குடும்பம் நலம் பேணுவது நம் கடமை. சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதுபோல ஆரோக்கியமே வளமான வாழ்க்கைக்கு பிரதானம். Meena Ramesh -
-
-
-
தயிர் சாதம்(curd rice recipe in tamil)
#LBநாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது மாணவ மாணவியர்கள் தயிர் சாதம்தான் டிஃபன் பாக்ஸில் கொண்டுவருவார்கள் . கோடைக்காலத்தில் அது தான் தேவாமிர்தம். காய் கறிகள் ; பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தாளித்த சுவையான தயிர் சாதம். அம்மா தத்தியோதனம் என்று சொல்வார்கள். பாட்டி பக்காளா பாத் (கன்னடம்) என்று சொல்வார்கள், #LB Lakshmi Sridharan Ph D -
மல்டி வெஜ் ரைத்தா (curd)
#கோல்டன் ஆப்ரன் 3கலவை காய்கறிகளைக் கொண்டு செய்யக்கூடிய தயிர் பச்சடி வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு.உடலுக்கு குளிர்ச்சி தரும். ஆரோக்கியம் அளிக்கும் உணவு. Meena Ramesh -
விரத ஸ்பெஷல், *தயிர் சாதம் வித் ஊறுகாய்*(virat curd rice recipe in tamil)
#VTஆடிப் பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வார்கள்.அதில் கண்டிப்பாக தயிர் சாதம் இருக்கும்.அதற்கு சைட்டிஷ்ஷாக ஊறுகாயை பயன்படுத்தலாம். Jegadhambal N -
-
வெஜ் ஃபுரூட் தயிர் சாதம்(veg fruit curd rice recipe in tamil)
வித்தியாசமான சுவையில் ஒரு தயிர் சாதம் செய்வது மிகவும் எளிது ருசியோ மிகவும் அபாரமாக இருக்கும் Lathamithra -
தயிர் இட்லி
#இட்லி #bookதயிர் வடை போல் தயிர் இட்லி. தயிர் வடை செய்யும் போது தயிர் இட்லி செய்தால் என்ன என்ற எண்ணத்தில் செய்ய நினைத்தேன். சுவை நன்றாக இருக்குமா என்ற சந்தேகத்தில் தான் செய்ய துணிந்தேன். வழக்கமான இட்லி மாவில் எப்போதும் சுடும் இட்லியை இரண்டு மட்டும் எடுத்து, தயிர் வடை செய்வது போல தயிர் பச்சடி தயார் செய்து, வெந்த இட்லியை சூடாக அதில் சேர்த்தேன். என் கணவர் சாப்பிட்டு விட்டு ஏது தயிர் வடை? ஒன்றுதான் கொடுத்தாய் இன்னொன்று இருந்தால் வேண்டும் என்று கேட்டார். அந்த் அளவிற்கு சுவையாக, தயிர் வடை போலவே இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.இட்லி கொஞ்சம் சிறிய அளவில் சுட்டு கொள்ளவும். Meena Ramesh -
பசும் தயிர் சாதம்
#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம் Jaya Kumar -
*சிகப்பரிசி தயிர் சாதம்*(red rice curd rice recipe in tamil)
#qkஇது எனது புது முயற்சி.சிகப்பரிசியில், புரதச்சத்து அதிகம் உள்ளது.புட்டு, களி, கஞ்சி செய்து சாப்பிடலாம்.சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றது.உடல் எடையைக் குறைக்கவும்,கொழுப்பைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. Jegadhambal N -
-
சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham
சக்கரை வள்ளி கிழங்கு மிகவும் நலம் தரும் காய்கறி. தேங்காய், பருப்பு , ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #everyday2 Lakshmi Sridharan Ph D -
-
தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
#Poojaஇது பாலில் அரிசியை வேக வைத்து செய்த தயிர் சாதம்.எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வழக்காமாக சமையல் செய்யும் ஐயர் சொல்லி குடுத்த முறை.இப்படி செய்தால் சீக்கிரம் தயிர் சாதம் புளிக்காது என்று அவர் சொன்னார்.கோவில்களுக்கு எடுத்து செல்லும் போது,அல்லது டூர் செல்லும் போது இப்படி செய்து எடுத்து செல்லலாம் , நன்றாக இருக்கும்.சீக்கிரம் புளிக்காது. Meena Ramesh -
-
-
கோடைக்கு ஏற்ற குழ குழு கலவை தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
வேக வைத்து வடித்த சாதம் ஆற வைத்து மசித்து கொள்ளவும் பிறகு அதோடு தேவையான உப்பு தயிர் சேர்த்து நன்கு கலந்து கொண்டு ஆயில் ஊற்றி ஊற்றி கடுகு உழுந்தம்பருப்பு சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை தாளித்து கொட்டி சேர்க்கவும் மல்லி இழைதூவி மாதுளம் முத்துக்கள் சேர்த்து தயிர் சாதம் சூப்பர் Kalavathi Jayabal -
-
-
தயிர் சாதம் வித் மாங்காய் தாளிப்பு
#combo5தயிர் சாதம் மிகவும் எளிமையான உணவாக இருந்தாலும் வெயிலுக்கு ஏற்றது மற்றும் சத்துள்ளது அதனுடன் மாங்காய் தாளிப்பு மிகவும் பொருத்தமான கூட்டணியாக இருக்கும் Mangala Meenakshi -
தக்காளி தயிர் சட்னி (Tomato Curd chutney recipe in tamil)
தக்காளி சட்னி நிறைய விதத்தில் செய்யலாம். ஆனால் நான் இன்று ஒரு புதிய விதத்தில் தயிர் சேர்த்து செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.#Cf4 Renukabala
More Recipes
கமெண்ட் (2)