காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#CF5 மோர் குழம்பு
Oஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது

காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)

#CF5 மோர் குழம்பு
Oஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 நபர்
  1. அரைப்பதற்கு
  2. 3 ஸ்பூன் கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பு
  3. 5 பச்சைமிளகாய்
  4. சிறிதளவுஇஞ்சி
  5. அரை ஸ்பூன் சீரகம்
  6. தாளிப்பதற்கு
  7. கால் லிட்டர் கெட்டி தயிர்
  8. இரண்டு ஸ்பூன் எண்ணெய்
  9. கால் ஸ்பூன் கடுகு
  10. கால் ஸ்பூன் வெந்தயம்
  11. கால் ஸ்பூன் பெருங்காயத்தூள்
  12. இருபதிலிருந்து இருபத்தைந்து சின்ன வெங்காயம்
  13. சிறிதளவுகறிவேப்பிலை
  14. நான்கு வர மிளகாய்
  15. மஞ்சள் தூள்
  16. கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் மிக்ஸி ஜாரில் 3 ஸ்பூன் கடலைப்பருப்பு, 5 பச்சைமிளகாய் நடுவில் கிறியது, சிறு துண்டு இஞ்சி, அரை ஸ்பூன் சீரகம் இது எல்லாவற்றையும் நன்கு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    அடுத்து கால் லிட்டர் கெட்டித் தயிர், கால் கப் தண்ணீரை மிக்சி ஜாரில் ஊற்றி இரண்டு அல்லது மூன்று சுத்து விட்டு மோராக எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    அடுத்து ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கால் ஸ்பூன் கடுகு கால் ஸ்பூன் வெந்தயம் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். வெந்தயம் கருகிவிடக்கூடாது

  4. 4

    இருபதிலிருந்து இருபத்தைந்து சின்ன வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, 4 அல்லது 5 வரமிளகாய் சேர்த்துக் கொள்ளவும். சேர்த்த பிறகு அதில் அரைத்த பேஸ்டை ஊற்றவேண்டும்.

  5. 5

    ஊற்றிய பிறகு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் மூடி போட்டு ஒரு கொதி விடவும்.கொதித்த பிறகு அதில் மோரை ஊற்றி கொள்ளவும்.

  6. 6

    மோர் ஊற்றிய பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து லைட்டாக சூடானதும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes